கொரோனா நோய் தொற்று கட்டுக்குள் வரும் வரை டாஸ்மாக் மதுபான கடைகளை மூட வேண்டும்: எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
2022-01-19@ 18:45:57

சென்னை: கொரோனா நோய் தொற்று கட்டுக்குள் வரும் வரை டாஸ்மாக் மதுபான கடைகளை மூட வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தில் கொரோனா நோய் தொற்றின் பரவல் அதிகரித்து வருகிறது. மேலும், பொங்கல் விடுமுறைக்கு பிறகு நோய் தொற்று அதிகரிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய சூழ்நிலையில், நாளொன்றுக்கு சுமார் 24 ஆயிரம் பேர் தமிழகத்தில் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு வருவதாக அரசே செய்தி குறிப்பில் வெளியிடுகிறது.
இந்நிலையில், டாஸ்மாக் கடைகளை திறந்து வைத்திருப்பது என்ன நியாயம்? தமிழகம் முழுவதும் ஒவ்வொரு டாஸ்மாக் கடை மற்றும் அதனுடைய பார்களின் முன்பும் நூற்றுக்கணக்கானோர் எந்தவிதமான கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளையும் கடைபிடிக்காமல் கூடி நிற்பதை கண்கூடாக பார்க்க முடிகிறது. இதற்கு முன்னாள், ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவிய கொரோனா நோய் தொற்று, தற்போது காற்றின் மூலம் ஒருவரிடம் இருந்து 9 பேருக்கு பரவுகிறது என்று மருத்துவ வல்லுநர்கள் கூறுகின்றனர்.
ஆகவே, அரசு மக்களின் இன்னுயிரோடு விளையாடாமல், கொரோனா நோய் தொற்று கட்டுக்குள் வரும் வரை, தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் மதுபான கடைகள் மற்றும் பார்களை உடனடியாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
மேலும் செய்திகள்
அண்ணாநகர் மண்டலத்தில் 400 பேருக்கு கொரோனா: தடுப்பு பணிகள் தீவிரம்
கோடம்பாக்கம் வள்ளியம்மாள் தோட்டத்தில் ஆக்கிரமிப்புகளை 2 வாரங்களில் அகற்ற வேண்டும்: தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு
சொத்து வரி செலுத்த சிறப்பு ஏற்பாடு: மாநகராட்சி தகவல்
சென்னையில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் ரூ.1.29 கோடி மதிப்பீட்டில் 26 செயற்கை நீரூற்றுகள்: வெளிநாடுகளில் உள்ளதைப்போல் ரம்யமான காட்சி; சிறியவர் முதல் பெரியவர்கள் வரை ரசிக்கின்றனர்
தொழிலதிபர் மீது வழக்கு ஸ்ரீபெரும்புதூர் போலீசாரிடம் சிபிசிஐடி விசாரணை: உயர் நீதிமன்றம் உத்தரவு
ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிறுநீரக ஆபரேஷன் செய்தவர்களில் 99 சதவீதம் பேர் நலமாக உள்ளனர்: அதிகாரி தகவல்
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!
கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!
நுபுர் சர்மாவை ஆதரித்த டெய்லர் தலை துண்டித்து கொடூர கொலை ராஜஸ்தானில் வன்முறை, போராட்டம்!!
ஆச்சர்யமூட்டும் கலைநயம்!: அமெரிக்கா சியாட்டெலில் அமைந்துள்ள கண்ணாடி பூங்காவின் வியக்க வைக்கும் புகைப்படங்கள்..!!
அமெரிக்காவில் ரயில் தடம் புரண்டு 3 பேர் பரிதாப சாவு; 50 பேர் காயம்