ஆழித் தேரோட்டத்துக்கு பந்தல்கால் நடும் நிகழ்ச்சி
2022-01-19@ 17:55:32

திருவாரூர்: திருவாரூரில் வரலாற்று சிறப்புமிக்க தியாகராஜர் சுவாமி கோயில் உள்ளது. சைவ சமயத்தின் தலைமை பீடமாகவும் பிறக்க முக்தியளிக்கும் ஸ்தலமாகவும் சமய குறவர்கள் நால்வரால் பாடல் பெற்ற தலமாகவும் இருந்து வருகிறது. கோயிலின் மூலவராக வன்மீகநாதரும் உற்சவராக தியாகராஜரும் உள்ளனர். தியாகராஜர் கோயிலின் ஆழித்தேர் ஆசிய கண்டத்திலேயே மிகப்பெரிய தேர் என்று அழைக்கப்பட்டு வருகிறது. இந்த கோயில் விழாக்களில் பங்குனி உத்திர விழா மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.
இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ஆழித்தேரோட்டமும் அதன்பின்னர் கோயிலின் மேற்குபுறத்தில் உள்ள கமலாலய குளத்தில் தெப்ப திருவிழாவும் நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில், நடப்பாண்டில் ஆழி தேரோட்டம் வரும் மார்ச் 15ம் தேதி நடக்கிறது. இதற்கான பந்தல்கால் முகூர்த்த நிகழ்ச்சி, தேரடி விநாயகர் கோயில் முன் நேற்று பக்தர்களின்றி நடந்தது. நிகழ்ச்சியையொட்டி திருஞானசம்மந்தர் பெருமான் தனது சன்னதியிலிருந்து எழுந்தளும் நிகழ்ச்சியும் நடந்தது.
மேலும் செய்திகள்
சாஸ்த்ரா நிகர்நிலை பல்கலைக்கழகம் தமிழ்நாடு அரசின் டைசல் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்
பொதுப்பணி துறையில் 13 உதவி பொறியாளர்களுக்கு பணி நியமன ஆணை: அமைச்சர் எ.வ.வேலு வழங்கினார்
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 2,743 பேருக்கு கொரோனா: சுகாதாரத்துறை அறிக்கை..!
மழைநீர் வடிகால் திட்டப்பணிகளை குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்காத 8 ஒப்பந்ததாரர்களுக்கு ரூ2,25,000 அபராதம்: மாநகராட்சி நடவடிக்கை
மின்வாரிய ஆள்தேர்வு அறிவிக்கை ரத்தால் படித்த இளைஞர்களின் எதிர்காலம் பாதிப்பு; உடனடியாக தேர்வு நடத்த வேண்டும்: அன்புமணி ராமதாஸ் அறிக்கை
தனியார் ஓட்டலில் கெட்டுப் போன இறால், மட்டன், மீன், சிக்கன் பறிமுதல்: அண்ணாநகரில் பரபரப்பு
ஹாட் டாக் பன் சாப்பிடும் போட்டி : 10 நிமிடங்களில் 63 பன்கள் சாப்பிட்டு ஜோய் செஸ்ட்நட் என்பவர் சாம்பியன்..!
தொடர் கனமழை : சிட்னி நகரத்தை சூழ்ந்த வெள்ளம்.. 50 ஆயிரம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற அறிவுறுத்தல்..
மெக்சிகோவில் விநோதம்.! பெண் முதலையை முத்தம் கொடுத்து மணந்த மேயர்!!
தோண்ட தோண்ட சடலங்கள்.. மணிப்பூரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்வு!!
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!