கேரளாவில் நடிகை பலாத்கார வழக்கு; நடிகர் திலீப்பின் நண்பர் தலைமறைவானார்: போலீசாரை கொல்ல சதித்திட்டம்
2022-01-19@ 17:07:54

திருவனந்தபுரம்: கேரளாவில் கடந்து ஐந்து வருடத்துக்கு முன் பிரபல மலையாள நடிகை பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கு விசாரணை சூடுபிடித்து உள்ளது. இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகர் திலீப்பின் நெருங்கிய நண்பரும் டைரக்டருமான பாலச்சந்திரகுமார், திலீப்புக்கு எதிராக போலீசிலும் நீதிமன்றத்திலும் தெரிவித்த சில முக்கிய விவரங்கள்தான் இதற்கு காரணமாகும். நடிகை பலாத்காரம் செய்யப்பட்ட போது எடுக்கப்பட்ட காட்சிகள் திலீப்பிடம் இருப்பதாகவும் இவ்வழக்கை விசாரிக்கும் டிஎஸ்பி உள்பட போலீசாரை கொல்ல திலீப்புடன் சேர்ந்து அவரது நெருங்கிய நண்பர்கள் சதித்திட்டம் தீட்டியதாகவும் பாலசந்திரகுமார் கூறினார்.
இதையடுத்து கொச்சி குற்றப்பிரிவு போலீசார் நடிகர் திலீப், அவரது தம்பி அனூப் மற்றும் திலீப்பின் தங்கையின் கணவர் சூரஜ், உறவினர் அப்பு, நெருங்கிய நண்பரும் ஓட்டல் பங்குதாரருமான சரத் உள்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த நிலையில், கடந்த 2 தினங்களுக்கு முன்பு சரத், திலீபின் தங்கையின் கணவர் சூரஜ் ஆகியோரின் வீடுகளில் குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தினர். சோதனையின்போது வழக்குக்கு தேவையான சில முக்கிய ஆவணங்கள் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனிடையே போலீசாருக்கு எதிராக சதித்திட்டம் தீட்டிய சம்பவத்தில் சரத்துக்கு மிக முக்கிய பங்கு இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து அவரை கைது செய்ய போலீசார் தேடியபோது சரத் தலைமறைவாகி விட்டார். அவரது செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து சரத்தை பல்வேறு இடங்களிலும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். திலீபுடன் சேர்ந்து சரத்தும் முன்ஜாமீன் கோரி கேரள உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.
மேலும் செய்திகள்
தொழில்நுட்ப பயன்பாட்டில் குற்றவாளிகளை விட புலனாய்வு அமைப்புகள் சிறப்பாக செயல்பட வேண்டும்: அமித் ஷா
ஜூலை 11 மகாராஷ்டிரா அதிருப்தி எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்யக்கூடாது: உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
மகாராஷ்டிராவில் முற்றும் மோதல்; ‘மத்திய பாதுகாப்பு படையை தயார் நிலையில் வைத்திருங்கள்’.! ஒன்றிய உள்துறை செயலாளருக்கு கவர்னர் கோஷ்யாரி கடிதம்
இடைத்தேர்தலில் பாஜகவிற்கு மக்கள் அமோக வெற்றியை கொடுத்துள்ளனர்; ஜே.பி.நட்டா மகிழ்ச்சி
தங்கக் கடத்தலில் பினராயி விஜயனுக்கு தொடர்பு என முழக்கம்: கூச்சல் குழப்பத்தால் கேரள சட்டப்பேரவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு
பத்ரா குடியிருப்பு மோசடி விவகாரம்!: சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத்துக்கு அமலாக்கத்துறை சம்மன்..!!
இஸ்ரேலில் உள்ள பாலைவனத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் பழங்கால மசூதி கண்டுபிடிப்பு..!!
ஈக்வேடாரில் தொடர்ந்து உயரும் எரிபொருட்களின் விலையால் பொதுமக்கள் சாலையில் போராட்டம்..!!
புதுச்சேரியில் இன்று பள்ளிகள் திறப்பு: மாணவர்களை உற்சாகமாக வரவேற்ற ஆசிரியர்கள்..!!
50 ஆண்டுகளில் முதன்முறையாக தொடங்கிய சில நிமிடங்களிலேயே முடிந்தது அதிமுக பொதுக்குழு கூட்டம்..!!
பாகிஸ்தானில் 48 செ.மீ. நீளமுடைய காதைக் கொண்டு உலக சாதனை படைத்த சிம்பா ஆட்டுக்குட்டி..!!!