காவேரிப்பாக்கத்தில் பஸ் நிலையத்தின் உள்ளே வந்து பயணிகளை ஏற்றி செல்லும் பஸ்கள்-அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை
2022-01-19@ 14:28:03

காவேரிப்பாக்கம் : காவேரிப்பாக்கம் பேருந்து நிலையத்தின் உள்ளே வந்து பயணிகளை ஏற்றிச்செல்வதால் பயணிகள் மகிழ்ச்சியடைந்தனர். மேலும், அதிகாரிகள் அதிரடியாக நடவடிக்கை மேற்கொண்டதால் நன்றி தெரிவித்தனர்.காவேரிப்பாக்கம் பேரூராட்சியில் பத்திரப்பதிவு அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம், வேளாண்மை அலுவலகம், வங்கிகள், வருவாய் அலுவலர் அலுவலகம், காவல் நிலையம், உள்ளிட்டவைகள் அமைந்துள்ளது. இதனால் சுற்றுப்புற பகுதிகளைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள், மாணவ மாணவிகள், அரசு மற்றும் தனியார் கம்பனி ஊழியர்கள், என அனைத்து தரப்பினரும் பேருந்து நிலையம் வந்து செல்கின்றனர்.
மேலும் காவேரிப்பாக்கம் பேரூராட்சி பகுதியில் புதிய பேருந்து நிலையத்தை தமிழக முதல்வர் கடந்த 8ம் தேதி காணொலி மூலம் திறந்து வைத்தார். இதில் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் உள்ளே வந்து செல்லாமல், வெளியே தேசிய நெடுஞ்சாலையிலேயே நின்று செல்கின்றன. இதனால் பேருந்துக்காக காத்திருக்கும் பயணிகள் பெரும் சிரமத்திற்குள்ளாகின்றனர்.
இதுகுறித்து கடந்த 16ம் தேதி தினகரன் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இதனையடுத்து அரசு அதிகாரிகள், நேற்று முன்தினம் பேருந்து நிலையத்தில் முகாமிட்டு, பேருந்துகள் தேசிய நெடுஞ்சாலையில் நின்று பயணிகளை ஏற்றி செல்லாமல், பேருந்து நிலையத்தின் உள்ளே வந்து பயணிகளை ஏற்றிச்செல்ல நடவடிக்கை மேற்கொண்டனர். இதனால் சென்னை, காஞ்சிபுரம், அரக்கோணம், உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகள் உள்ளே பேருந்து நிலையத்தின் உள்ளே வந்து பயணிகளை ஏற்றிச்சென்றதால், மகிழ்ச்சியடைந்தனர்.
மேலும் செய்திகள்
அதிமுக பொதுக்குழுவில் பெரும் தொகை பட்டுவாடா: எடப்பாடிக்கு மெஜாரிட்டி கிடைத்த ரகசியத்தை அம்பலபடுத்தினார் புதுச்சேரி மாநில செயலாளர்
கைதி மாயம்: சேலம் சிறை அதிகாரியிடம் 3 மணி நேரம் விசாரணை
கூட்டுறவுத்துறையில் அதிமுக ஆட்சியில் ரூ780 கோடி முறைகேடு: அமைச்சர் ஐ.பெரியசாமி குற்றச்சாட்டு
ரூ700 கோடி நில மோசடி வழக்கில் குற்றவாளிகளை பிடிக்க சிறப்பு படை
நள்ளிரவில் மருந்து கிடைக்காமல் தவித்த இலங்கை டாக்டருக்கு உதவிய திருச்செந்தூர் போலீஸ்காரர்: பாராட்டு குவிகிறது
6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி காதுகேளாதோர் காத்திருப்பு போராட்டம்
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!
கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!
நுபுர் சர்மாவை ஆதரித்த டெய்லர் தலை துண்டித்து கொடூர கொலை ராஜஸ்தானில் வன்முறை, போராட்டம்!!
ஆச்சர்யமூட்டும் கலைநயம்!: அமெரிக்கா சியாட்டெலில் அமைந்துள்ள கண்ணாடி பூங்காவின் வியக்க வைக்கும் புகைப்படங்கள்..!!
அமெரிக்காவில் ரயில் தடம் புரண்டு 3 பேர் பரிதாப சாவு; 50 பேர் காயம்