15-18 வயதுள்ள இளையோரில் 50% பேர் தடுப்பூசியின் முதலாவது டோஸ் செலுத்தியிருப்பதற்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு
2022-01-19@ 14:13:01

டெல்லி :இந்தியாவில் கொரோனா பரவல் கிடுகிடுவென அதிகரித்துள்ளது. ஓமிக்ரான் எனும் உருமாறிய கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது.தனையடுத்து நாட்டின் பல மாநிலங்களில் கொரோனா கால கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. பெரும்பாலான மாநிலங்களில் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டு இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் கொரோனா தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.இந்நிலையில் நாடு முழுவதும் 15 வயது முதல் 18 வயது வரையிலான சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசிகள் போடும் பணி கடந்த 3ம் தேதி முதல் தொடங்கியது.
இந்த நிலையில், 15-18-க்கு இடைபட்ட வயதுள்ள இளையோரில் 50% பேர் தடுப்பூசியின் முதலாவது டோஸ் செலுத்தியிருப்பதாக ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், 'கோவிட்-19க்கு எதிரான இந்தியாவின் போராட்டத்திற்கு இது மிகப்பெரிய நாள்! 15-18 வயதுக்குட்பட்ட இளையவர்களில் 50% க்கும் அதிகமானோர் #COVID19 தடுப்பூசியின் முதல் டோஸ் பெற்றுள்ளனர்.நல்லது, என் இளம் நண்பர்களே!தடுப்பூசி போடுவதற்கான உங்கள் உற்சாகம், இந்திய மக்களை ஊக்குவிக்கிறது.,' என்று தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் 15-18-க்கு இடைபட்ட வயதுள்ள இளையோரில் 50% பேர் தடுப்பூசியின் முதலாவது டோஸ் செலுத்தியிருப்பதற்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,
“இளைய மற்றும் இளமைத்தன்மையுள்ள இந்தியா வழிகாட்டுகிறது!
இது ஊக்கமளிக்கும் செய்தியாகும். இந்த வேகத்தை தொடர்ந்து நாம் பராமரிப்போம்.
தடுப்பூசி செலுத்துவதும், கோவிட்-19 தொடர்பான விதிமுறைகள் அனைத்தையும் கடைபிடிப்பதும் முக்கியமாகும். அனைவரும் ஒன்றிணைந்து இந்தப் பெருந்தொற்றை எதிர்த்துப் போராடுவோம்”.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகள்
தவறுதலாக எல்லை தாண்டிய குழந்தை: பாக். வீரர்களிடம் ஒப்படைப்பு
வெளிநாடுகளை சேர்ந்தவர்களிடம் இருந்து தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் ரூ.10 லட்சம் வரை நன்கொடை பெறலாம்: எப்சிஆர்ஏ சட்டத்தில் ஒன்றிய அரசு திருத்தம்
6 நாட்களுக்கு முன்பே தென்மேற்கு பருவமழை நாடு முழுதும் துவங்கியது
சுயநலத்துக்காக பயன்படுத்த பார்க்கும் அரசியல் கட்சிகள் அரசியல் சட்டத்துக்கு மட்டுமே உச்ச நீதிமன்றம் பதில் சொல்லும்: தலைமை நீதிபதி என்வி.ரமணா காட்டம்
பயணிகள் அலறல் 5000 அடி உயரத்தில் விமானத்தில் புகை: 15 நாளில் 5வது சம்பவம்
முதல்வர் பைரன் சிங் அதிர்ச்சி தகவல் மணிப்பூர் நிலச்சரிவில் சிக்கிய 80 பேரும் பலி: சடலங்கள் மட்டுமே மீட்பு
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!
கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!
நுபுர் சர்மாவை ஆதரித்த டெய்லர் தலை துண்டித்து கொடூர கொலை ராஜஸ்தானில் வன்முறை, போராட்டம்!!
ஆச்சர்யமூட்டும் கலைநயம்!: அமெரிக்கா சியாட்டெலில் அமைந்துள்ள கண்ணாடி பூங்காவின் வியக்க வைக்கும் புகைப்படங்கள்..!!
அமெரிக்காவில் ரயில் தடம் புரண்டு 3 பேர் பரிதாப சாவு; 50 பேர் காயம்