ஜகார்த்தா நகரம் மிக வேகமாக கடலில் மூழ்கி வருவதால் போர்னியோ தீவில் புதிய தலைநகரை உருவாகிறது இந்தோசினேசியா!!
2022-01-19@ 10:46:26

ஜகார்தா : இந்தோனேஷியாவின் தலைநகரை ஜகார்த்தாவில் இருந்து போர்னியோ தீவுக்கு மாற்றும் மசோதாவிற்கு அந்நாட்டு நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. புதிய தலைநகருக்கு நுசான்தாரா என பெயர் சூட்டப்பட்டுள்ளது. பருவநிலை மாற்றத்தால் இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தா மிக வேகமாக கடலில் மூழ்கி வருகிறது. இதனால் போர்னியோ தீவிற்கு தலைநகரை மாற்ற கடந்த 2019ம் ஆண்டு அதிபர் விடோடோ அறிவிப்பை வெளியிட்டு இருந்தார். பெருந்தொற்றால் இதற்கான நடைமுறை தொடர்வதில் தாமதம் நிலவி வந்தது.
இந்த நிலையில் தலைநகரை மாற்றும் சட்ட மசோதா, நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. மசோதா நிறைவேறியதும் நாடாளுமன்றத்தில் பேசிய திட்டமிடல் துறை அமைச்சர் சுதர்ஷோ புதிய தலைநகர் தேசத்தின் அடையாளமாக திகழும் என்றார். புதிய தலைநகருக்கு நுசான்தாரா என்று அதிபர் ஜோகோ விடோடோ பெயர் சூட்டியுள்ளார். ஆசியாவின் மிகப்பெரிய தீவான போர்னியோவில் 2 லட்சத்து 38 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக தலைநகர் அமைய உள்ளது.
மேலும் செய்திகள்
ஜி-7 நாட்டு தலைவர்கள் துணியின்றி இருந்தால் பார்க்கவே சகிக்காது; புடின் பதிலடி
நைஜீரியாவில் பஸ் எரிந்தது 5 பேர் உடல் கருகி பலி
பும்ராவுக்கு கேப்டன் பொறுப்பு நெகடிவ் வந்தால் ரோகித் களம் இறங்க வாய்ப்பு; பயிற்சியாளர் டிராவிட் கருத்து
பாகிஸ்தானில் தொடர் மின்வெட்டு; மக்கள் சாலை மறியல் போராட்டம்
இங்கிலாந்தில் 1,076 பேருக்கு குரங்கு அம்மை பாதிப்பு
உக்ரைனில் பல்பொருள் அங்காடி மீது ஏவுகணை தாக்குதல் நடத்திய ரஷ்ய அதிபர் புதின் ஒரு பயங்கரவாதி: ஜெலன்ஸ்கி சாடல்
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!
கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!
நுபுர் சர்மாவை ஆதரித்த டெய்லர் தலை துண்டித்து கொடூர கொலை ராஜஸ்தானில் வன்முறை, போராட்டம்!!
ஆச்சர்யமூட்டும் கலைநயம்!: அமெரிக்கா சியாட்டெலில் அமைந்துள்ள கண்ணாடி பூங்காவின் வியக்க வைக்கும் புகைப்படங்கள்..!!
அமெரிக்காவில் ரயில் தடம் புரண்டு 3 பேர் பரிதாப சாவு; 50 பேர் காயம்