சுவிஸ் வங்கியில் வாங்கிய கடனை திருப்பிச் செலுத்தாததால் லண்டனில் உள்ள சொகுசு பங்களாவை காலி செய்ய விஜய் மல்லையாவிற்கு உத்தரவு!!
2022-01-19@ 08:48:03

லண்டன் : சுவிஸ் வங்கியில் வாங்கிய கடனை திருப்பிச் செலுத்தாததால் லண்டனில் உள்ள சொகுசு பங்களாவை விட்டு வெளியேறும்படி விஜய் மல்லையாவிற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் பல்வேறு வங்கிகளில் 9000 கோடி ரூபாய் வரை கடன் வாங்கிவிட்டு அதை திருப்பிச் செலுத்தாத விஜய் மல்லையா, கடந்த 2016ல் பிரிட்டனுக்கு தப்பிச் சென்றார். அவரை நாடு கடத்தி இந்தியாவுக்கு அழைத்து வருவதற்கான வழக்கு விசாரணை அந்நாட்டு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இதனிடையே லண்டனில் ரிஜின் பார்க் நகரில் உள்ள பல கோடி ரூபாய் மதிப்பிலான சொகுசு பங்களாவை சுவிஸ் வங்கியில் அடமானம் வைத்து விஜய் மல்லையா 185 கோடி ரூபாய் கடன் பெற்று இருந்தார். ஒப்பந்தப்படி 5 ஆண்டுகளுக்குள் மல்லையா கடனை திருப்பிச் செலுத்தாததால் சுவிஸ் வங்கி நீதிமன்றத்தை நாடியது. இந்த வழக்கில் 2017ம் ஆண்டு தீர்ப்பளித்த நீதிமன்றம், லண்டனில் உள்ள விஜய் மல்லையாவின் சொகுசு பங்களாவை ஜப்தி செய்ய உத்தரவிட்டது. இதையடுத்து விஜய் மல்லையாவை சொகுசு பங்களாவில் இருந்து வெளியேற்ற மீண்டும் நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், விஜய் மல்லையா பங்களாவை விட்டு வெளியேற வேண்டும் என்றும் பங்களாவை சுவிஸ் வங்கி நிர்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது.
Tags:
விஜய் மல்லையாமேலும் செய்திகள்
நைட் கிளப்பில் பாலியல் ரீதியாக அநாகரீகம் : ராஜினாமா செய்த 2 அமைச்சர்கள்.. புது அமைச்சர்களை நியமித்து இங்கிலாந்து பிரதமர் அதிரடி
ஏமன் நாட்டில் ராணுவ ஆயுத சேமிப்பு கிடங்கில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்து... 10 பேர் பலி.. 45 பேர் படுகாயம்!!
அரசியல் எனக்கு ஒத்துவராது அக்ஷய் குமார் கருத்து
2 ஆண்டுகளுக்குப் பிறகு சர்வதேச விமான சேவை மீண்டும் துவங்கும் சீனா: இந்தியாவுக்கு அனுமதியில்லை
ரஷ்யாவின் எதிர்ப்பை மீறி பின்லாந்து, ஸ்வீடனுக்கு நேட்டோவில் அனுமதி: 30 நாடுகள் ஒப்புதல் கையெழுத்து
இலங்கை நாடாளுமன்றத்தில் இருந்து அதிபர் கோத்தபய விரட்டியடிப்பு: எதிர்க்கட்சிகளின் கோஷத்தால் ஓட்டம்
ஹாட் டாக் பன் சாப்பிடும் போட்டி : 10 நிமிடங்களில் 63 பன்கள் சாப்பிட்டு ஜோய் செஸ்ட்நட் என்பவர் சாம்பியன்..!
தொடர் கனமழை : சிட்னி நகரத்தை சூழ்ந்த வெள்ளம்.. 50 ஆயிரம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற அறிவுறுத்தல்..
மெக்சிகோவில் விநோதம்.! பெண் முதலையை முத்தம் கொடுத்து மணந்த மேயர்!!
தோண்ட தோண்ட சடலங்கள்.. மணிப்பூரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்வு!!
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!