சபரிமலை திருவாபரண பாதையில் வெடி பொருட்கள் கண்டெடுப்பு: சதி செயலா? என போலீஸ் விசாரணை
2022-01-19@ 00:23:22

திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலில் நாளை காலை கோயில் நடை சாத்தப்படுகிறது. மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு ஐயப்பன் விக்ரகத்தில் அணிவிக்கப்பட்ட திருவாபரணம் நடை சாத்தப்பட்ட பின்னர் மீண்டும் பந்தளம் கொண்டு செல்லப்படும். இந்த ஆபரணம் 21ம் தேதி பந்தளத்தை அடையும். சபரிமலையில் இருந்து திருவாபரணம் கொண்டு செல்ல பாரம்பரிய பாதை உள்ளது. திருவாபரணம் செல்லும் பாதையில் ,வடசேரிக்கரை அருகே பேங்காட்டில் ஆற்றுப்பாலம் உள்ளது. இந்த பாலம் அருகே ஒரு பிளாஸ்டிக் பையில் மர்ம பொருள் இருப்பதை அந்த பகுதியை சேர்ந்த சிலர் பார்த்துள்ளனர். அதை திறந்து பார்த்தபோது ஜெலட்டின் குச்சிகள் என்று தெரிய வந்தது. இது குறித்து வடசேரிக்கரை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
போலீசார் விரைந்து சென்று அதை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அது சக்தி வாய்ந்த வெடி பொருள் என்பது தெரிய வந்தது. திருவாபரணம் செல்லும் பாதையில் இது வைக்கப்பட்டது எதற்காக என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். சம்பவ இடத்திற்கு பத்தனம்திட்டை மாவட்ட எஸ்பி உட்பட அதிகாரிகள் விரைந்து சென்று ஆய்வு நடத்தினர். இது குறித்து திருவாபரண பாதுகாப்பு அமைப்பின் தலைவர் சசிகுமார் வர்மா கூறுகையில், திருவாபரண பாதையில் வெடி பொருள் கைப்பற்றப்பட்டது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. இதில் சதி திட்டம் உள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்தவேண்டும் என்றார். இது குறித்து தென் மண்டல ஐஜி பிரகாஷ் கூறியதாவது: ‘இது தொடர்பாக தீவிர விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது’ என்றார்.
Tags:
Sabarimala Thiruvaparana Path Explosives Discovery Police Investigation சபரிமலை திருவாபரண பாதை வெடி பொருட்கள் கண்டெடுப்பு போலீஸ் விசாரணைமேலும் செய்திகள்
பிரதமர் யார் நலனின் அக்கறை காட்டுகிறார்?.. ஜிஎஸ்டி வரி குறித்து ராகுல் காந்தி கண்டனம்..!
தற்கொலை செய்து கொண்ட நடிகர் சுஷாந்த் உடன் தங்கியவருக்கு ஜாமின்: மும்பை ஐகோர்ட் உத்தரவு
பஞ்சாப் பாடகர் கொலை வழக்கு; காரில் ஆட்டம் போட்ட குற்றவாளிகள் கைது: டெல்லி போலீஸ் அதிரடி
பாஜக ஜனாதிபதி வேட்பாளருக்கு ஹேமந்த் சோரனின் ஆதரவு கிடைக்குமா?.. பழங்குடியினர் கட்சி என்பதால் எதிர்பார்ப்பு
பெண் தெய்வம் குறித்த சர்ச்சை: லீனா மீது உ.பி போலீஸ் வழக்கு
அரசியல் நமக்கு ஒத்துவராது: பாலிவுட் நடிகர் கருத்து
தொடர் கனமழை : சிட்னி நகரத்தை சூழ்ந்த வெள்ளம்.. 50 ஆயிரம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற அறிவுறுத்தல்..
மெக்சிகோவில் விநோதம்.! பெண் முதலையை முத்தம் கொடுத்து மணந்த மேயர்!!
தோண்ட தோண்ட சடலங்கள்.. மணிப்பூரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்வு!!
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!
கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!