சபரிமலையில் மகரவிளக்கு தரிசனம் இன்றுடன் முடிகிறது: நாளை நடை அடைப்பு
2022-01-19@ 00:23:14

திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலில் இன்றுடன் மகரவிளக்கு கால தரிசனம் நிறைவடைகிறது. இதையடுத்து, நாளை (20ம் தேதி) காலை கோயில் நடை சாத்தப்படும். சபரிமலை ஐயப்பன் கோயிலில் கடந்த 14ம் தேதி பிரசித்தி பெற்ற மகரவிளக்கு பூஜையும், மகரஜோதி தரிசனமும் நடைபெற்றது. ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் மகர ஜோதியை தரிசித்தனர். மகரவிளக்கு பூஜை முடிந்த பின்னரும் சபரிமலையில் பக்தர்கள் குவிந்து வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு வரை திருவாபரண அலங்காரத்துடன் பக்தர்கள் ஐயப்பனை தரிசனம் செய்தனர். நேற்று வரை பக்தர்கள் நெய்யபிஷேம் செய்து கொள்ள அனுமதிக்கப்பட்டது. இன்று இரவு வரை மட்டுமே பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். நாளை (20ம் தேதி) காலை 6.30 மணியளவில் கோயில் நடை சாத்தப்படும். அன்றுடன் மண்டல, மகரவிளக்கு காலம் நிறைவடையும். மீண்டும் மாசி மாத பூஜைகளுக்காக பிப்ரவரி மாதம் 12ம் தேதி கோயில் நடை திறக்கப்படும்.
Tags:
Sabarimala Maharavilakku Darshan today tomorrow walk closure சபரிமலை மகரவிளக்கு தரிசனம் இன்று நாளை நடை அடைப்புமேலும் செய்திகள்
அசாமில் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 173 ஆக உயர்வு!!
பிரசித்திபெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அலைமோதும் பக்தர்கள்; இடைத்தரகர்கள் ஒழிப்பால் தேவஸ்தானத்துக்கு ஆண்டுக்கு ரூ.500 கோடி கூடுதல் வருவாய்: ேநரடி லட்டு விற்பனையில் ரூ.250 கோடி
உதய்பூரில் தையல் தொழிலாளி படுகொலை செய்யப்பட்டதற்கும் மும்பை தீவிரவாத தாக்குதலுக்கும் தொடர்பு : திடுக்கிடும் தகவல்!!
தென்மேற்கு பருவமழை மீண்டும் தீவிரம் அடைந்துள்ளது; கேரளாவில் 11 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை.! வானிலை ஆய்வு மையம் தகவல்
ஆந்திரப்பிரதேசத்தில் வரும் 4ம் தேதி விடுதலை போராட்ட வீரர் அல்லூரி சீதாராம ராஜூவின் 30 அடி உயர வெண்கல சிலையை திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி!!
கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட ஏக்நாத் ஷிண்டே சிவசேனாவில் இருந்து நீக்கம் : உத்தவ் தாக்கரே அதிரடி
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!
கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!
நுபுர் சர்மாவை ஆதரித்த டெய்லர் தலை துண்டித்து கொடூர கொலை ராஜஸ்தானில் வன்முறை, போராட்டம்!!
ஆச்சர்யமூட்டும் கலைநயம்!: அமெரிக்கா சியாட்டெலில் அமைந்துள்ள கண்ணாடி பூங்காவின் வியக்க வைக்கும் புகைப்படங்கள்..!!
அமெரிக்காவில் ரயில் தடம் புரண்டு 3 பேர் பரிதாப சாவு; 50 பேர் காயம்