பொங்கல் பண்டிகை விடுமுறை: ஈரோடு ஜவுளி சந்தை வெறிச்
2022-01-18@ 19:06:22

ஈரோடு: பொங்கல் பண்டிகை தொடர் விடுமுறை காரணமாக ஈரோட்டில் இன்று நடந்த ஜவுளி சந்தையில் வியாபாரிகள், பொதுமக்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. ஈரோடு ஜவுளி சந்தை வாரந்தோறும் செவ்வாய்கிழமை நடப்பது வழக்கமாகும். தமிழகம் மட்டுமல்லாது கர்நாடக, கேரளா, ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து ஏராளமான மொத்த வியாபாரிகள் கலந்து கொண்டு ஜவுளிகளை கொள்முதல் செய்வார்கள். கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் பண்டிகையையொட்டி கடந்த 4 வாரங்களாக ஈரோடு ஜவுளி சந்தையில் வியாபாரம் அதிக அளவில் நடைபெற்றது.
இந்நிலையில், இன்று நடந்த ஜவுளி சந்தையில் வாடிக்கையாளர்கள், வியாபாரிகள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. பொங்கல் பண்டிகை தொடர் விடுமுறை காரணமாக வாடிக்கையாளர்கள் யாரும் வரவில்லை என்று வியாபாரிகள் தரப்பில் கூறினர். இதுகுறித்து ஜவுளி வியாபாரிகள் தரப்பில் கூறுகையில், ‘பொங்கல் பண்டிகையையொட்டி தொடர் விடுமுறை காரணமாக ஜவுளி சந்தைக்கு வாடிக்கையாளர்கள் யாரும் வரவில்லை. மேலும் வியாபாரிகளும் குறைந்த அளவிலேயே கடைகளை திறந்துள்ளனர்’ என்றனர்.
மேலும் செய்திகள்
8.4 கிலோ போலி நகை மோசடி: ஆரணி கூட்டுறவு வங்கியின் நிர்வாக குழு கூண்டோடு கலைப்பு: மாவட்ட இணைப்பதிவாளர் அதிரடி
காரியாபட்டி அருகே 1,100 ஆண்டு பழமையான சமண பள்ளி கண்டுபிடிப்பு
தமிழக-கர்நாடக எல்லையில் காரை துரத்திய காட்டு யானை: உயிர் தப்பிய பயணிகள்
முதுகுளத்தூர் அருகே கபடி போட்டியால் இரு கிராமத்தினர் இடையே மோதல்: இருதரப்பையும் சேர்ந்த 400 பேர் மீது வழக்குப்பதிவு
மேற்கு தொடர்ச்சி மலையில் கனமழை கோவை குற்றாலம், ஆழியார் கவியருவியில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலா பயணிகளுக்கு தடை
கடியபட்டணத்தில் கடல் சீற்றம் அலை தடுப்பு சுவரில் தூக்கி வீசப்பட்ட பைபர் வள்ளம்: ஒரு வள்ளம் கடலில் மூழ்கியது
ஹாட் டாக் பன் சாப்பிடும் போட்டி : 10 நிமிடங்களில் 63 பன்கள் சாப்பிட்டு ஜோய் செஸ்ட்நட் என்பவர் சாம்பியன்..!
தொடர் கனமழை : சிட்னி நகரத்தை சூழ்ந்த வெள்ளம்.. 50 ஆயிரம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற அறிவுறுத்தல்..
மெக்சிகோவில் விநோதம்.! பெண் முதலையை முத்தம் கொடுத்து மணந்த மேயர்!!
தோண்ட தோண்ட சடலங்கள்.. மணிப்பூரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்வு!!
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!