கொரோனா பூஸ்டர் டோஸ் செலுத்த வியாழக்கிழமைகளில் சிறப்பு முகாம் நடைபெறும்; அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
2022-01-18@ 12:01:56

சென்னை: கொரோனா பூஸ்டர் டோஸ் செலுத்த வியாழக்கிழமைகளில் சிறப்பு முகாம் நடத்தப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தாக்கம் அதிகளவில் பரவி வந்தாலும், கொரோனா தடுப்பூசி அதிகமானோர் எடுத்து கொண்டுள்ளதால், உயிரிழப்புகள் குறைந்த அளவில் ஏற்படுகிறது. எனவே, தமிழகம் முழுவதிலும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் மும்முரமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில் வாரம்தோறும் தற்பொழுது சனிக்கிழமைகளில் சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது. இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி வழங்கப்பட்டு வருகிறது. பூஸ்டர் டோஸ் இனி வரும் வாரங்களில் வியாழக்கிழமைகளில் சிறப்பு முகாம் அமைத்து செலுத்தப்படும் எனவும், அதேசமயம் வழக்கமாக நடக்கும் சனிக்கிழமை சிறப்பு முகாமும் நடைபெறும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகள்
பத்திரிகையாளர் நல வாரியத்தின் இரண்டாவது கூட்டம் நாளை நடைபெறும் என அறிவிப்பு
ஒலி மாசு விழிப்புணர்வு வாரத்தை தொடங்கி வைத்தார் சென்னை பெருநகர காவல் ஆணையாளர்
மாநகராட்சி டெண்டர் முறைகேடு தொடர்பாக எஸ்.பி.வேலுமணி மீது தொடரப்பட்ட வழக்குக்கு தடையில்லை: ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!!
இல்லத்தரசிகளுக்கு விரைவில் 1000 ரூபாய் வழங்கப்படும்; ஆர்.எஸ்.பாரதி பேச்சு
‘இந்தியப் பொதுத்துறை நிறுவனங்களின் தந்தை' என்று போற்றப்பட்ட கிருஷ்ணமூர்த்தி மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!!
11-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தோல்வி அடைந்தவர்களுக்கு ஆகஸ்டில் துணைத் தேர்வு!
இஸ்ரேலில் உள்ள பாலைவனத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் பழங்கால மசூதி கண்டுபிடிப்பு..!!
ஈக்வேடாரில் தொடர்ந்து உயரும் எரிபொருட்களின் விலையால் பொதுமக்கள் சாலையில் போராட்டம்..!!
புதுச்சேரியில் இன்று பள்ளிகள் திறப்பு: மாணவர்களை உற்சாகமாக வரவேற்ற ஆசிரியர்கள்..!!
50 ஆண்டுகளில் முதன்முறையாக தொடங்கிய சில நிமிடங்களிலேயே முடிந்தது அதிமுக பொதுக்குழு கூட்டம்..!!
பாகிஸ்தானில் 48 செ.மீ. நீளமுடைய காதைக் கொண்டு உலக சாதனை படைத்த சிம்பா ஆட்டுக்குட்டி..!!!