SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பிரபல இசையமைப்பாளர் கொரோனாவால் மரணம்

2022-01-18@ 02:37:30

திருவனந்தபுரம்: மலையாள சினிமாவின் பழம்பெரும் இசையமைப்பாளர் ஆலப்பி ரங்கநாத் (73). 1973ம் ஆண்டு ஜீசஸ் என்ற படத்தில் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். அதன்பின்னர் 100க்கும் மேற்பட்ட மலையாள படங்களில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களுக்கு இசை அமைத்துள்ளார். சினிமா தவிர 42 நாடகங்களையும், 25 நடன நாடகங்களையும் எழுதி இயக்கி உள்ளார். இவருக்கு கடந்த 14ம் தேதி கேரள அரசின் ஹரிவராசனம் விருது சபரிமலையில் வைத்து வழங்கப்பட்டது. அதன்பின் ஊர்  திரும்பியவர், ரத்த அழுத்தம் காரணமாக கோட்டயத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நேற்று முன்தினம் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்த  நிலையில் அன்று இரவு சுமார் 10 மணியளவில் சிகிச்சை பலனின்றி ஆலப்பி ரங்கநாத் உயிரிழந்தார். இவரது மறைவுக்கு கேரள திரையுலகை சேர்ந்த நடிகர், நடிகைகள் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • SYDNEYY111

    தொடர் கனமழை : சிட்னி நகரத்தை சூழ்ந்த வெள்ளம்.. 50 ஆயிரம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற அறிவுறுத்தல்..

  • Mexico_Mayor

    மெக்சிகோவில் விநோதம்.! பெண் முதலையை முத்தம் கொடுத்து மணந்த மேயர்!!

  • manipurlandaa1

    தோண்ட தோண்ட சடலங்கள்.. மணிப்பூரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்வு!!

  • America_Truck

    அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!

  • wild-fire-california-30

    கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்