ஆசிய கோப்பை மகளிர் ஹாக்கி ஓமன் சென்றது இந்திய அணி
2022-01-18@ 01:52:18

மஸ்கட்: ஓமனில் நடைபெற உள்ள ஆசிய கோப்பை மகளிர் ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்க உள்ள இந்திய மகளிர் அணி மஸ்கட் சென்றடைந்தது. ஆசிய கோப்பை மகளிர் ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டி ஓமன் தலைநகர் மஸ்கட்டில் ஜன.21-28 வரை நடைபெற உள்ளது. இந்த தொடரில் மொத்தம் 8 அணிகள் 2 பிரிவுகளாக லீக் சுற்றில் மோதுகின்றன. ஏ பிரிவில் இந்தியா, ஜப்பான், மலேசியா, சிங்கப்பூர் அணிகளும், பி பிரிவில் சீனா, கொரியா, தாய்லாந்து, இந்தோனேசியா அணிகளும் இடம் பிடித்துள்ளன. லீக் சுற்றின் முடிவில் இரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.
இந்திய அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் (ஜன.21) மலேசியாவை எதிர்கொள்கிறது. தொடர்ந்து ஜன.23ம் தேதி ஜப்பானுடனும், ஜன.24ம் தேதி சிங்கப்பூருடனும் மோதுகிறது. அரையிறுதி ஆட்டங்கள் ஜன.26ம் தேதியும், பைனல் ஜன.28ம் தேதியும் நடைபெறும். இத்தொடரில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அடுத்த ஆண்டு ஸ்பெயின் மற்றும் ஹாலந்தில் நடைபெறும் உலக கோப்பையில் விளையாட தகுதி பெறும். ஆசிய கோப்பையில் பங்கேற்பதற்காக, கோல்கீப்பர் சவீதா தலைமையிலான இந்திய அணி பெங்களூருவில் இருந்து புறப்பட்டு இந்திய நேரப்படி நேற்று அதிகாலை ஓமன் தலைநகர் மஸ்கட் சென்றடைந்தது.
மேலும் செய்திகள்
சில்லி பாயிண்ட்
இங்கிலாந்துடன் 5வது டெஸ்ட் ரோகித்துக்கு பதிலாக பும்ரா கேப்டன்
3வது சுற்றில் ஜோகோவிச்: கோன்டவெய்ட், ரூட் அதிர்ச்சி
லயன் அபார பந்துவீச்சு 212 ரன்னில் சுருண்டது இலங்கை
பி.வி.சிந்து முன்னேற்றம்
விருதுகளை அள்ளிய ஹூடா
ஆச்சர்யமூட்டும் கலைநயம்!: அமெரிக்கா சியாட்டெலில் அமைந்துள்ள கண்ணாடி பூங்காவின் வியக்க வைக்கும் புகைப்படங்கள்..!!
அமெரிக்காவில் ரயில் தடம் புரண்டு 3 பேர் பரிதாப சாவு; 50 பேர் காயம்
அசாம் வெள்ளப்பெருக்கு: 135 பேர் உயிரிழந்த நிலையில் மீட்புப்பணிகள் தீவிரம்
ஊர் சுற்றலாம் வாங்க!: உள்ளம் கொள்ளை கொள்ளும் அழகான இந்திய சுற்றுலா இடங்களின் புகைப்பட தொகுப்பு..!!
உக்ரைனில் 1,000 பேர் இருந்த மாலில் ரஷ்யா ஏவுகணை தாக்குதல்: 16 பேர் பலி... 59 பேர் படுகாயம்;