ஆவடி அருகே சிக்னல் வயர்கள் துண்டிப்பு எக்ஸ்பிரஸ் ரயில்கள் சேவை பாதிப்பு
2022-01-18@ 01:35:27

ஆவடி: சென்னையில் இருந்து அரக்கோணம் மார்க்கமாக மின்சார ரயில், எக்ஸ்பிரஸ் ரயில், சரக்கு ரயில்கள் என நூற்றுக்கணக்கான ரயில்கள் தினசரி இயக்கப்படுகின்றன. மேற்கண்ட ரயில்களில் ஆயிரக்கணக்கானோர் தினசரி பயணம் செய்து வருகின்றனர். இதேபோல், சென்னையில் இருந்து பல்வேறு மாநிலங்கள், மாவட்டங்களுக்கு இயக்கப்படும் சரக்கு ரயில்கள் இந்த தடத்தில்தான் சென்று வருகின்றன. இதனால், இந்த ரயில் மார்க்கம் எப்போதும் பரபரப்பாக காணப்படும். இந்நிலையில், ஆவடி அடுத்த பட்டாபிராம் ரயில் நிலையம் அருகே நேற்று அதிகாலை சென்னை நோக்கி எக்ஸ்பிரஸ் ரயில்கள் வந்து கொண்டிருந்தன. அப்போது, அந்த பகுதியில் ரயில்களுக்கு முறையாக சிக்னல் கிடைக்கவில்லை. இதனால், 3 எக்ஸ்பிரஸ் ரயில்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டன.
பின்னர், இதுகுறித்து ரயில்வே நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், ஆவடி ரயில்வே அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, அங்குள்ள சிக்னல் கம்பம் மற்றும் வயர்களை சோதனையிட்டனர். அப்போது, எக்ஸ்பிரஸ் ரயில் செல்லும் பாதைக்கான சிக்னல் வயர்கள் துண்டிக்கப்பட்டிருந்ததும், இதனால், எக்ஸ்பிரஸ் ரயில்களுக்கு முறையாக சிக்னல் கிடைக்கவில்லை என்பதும் தெரியவந்தது. இதனை உரிய நேரத்தில் ரயில்வே அதிகாரிகள் கண்டுபிடித்தால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. உடனே, ரயில்வே தொழில்நுட்ப ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, துண்டிக்கப்பட்ட சிக்னல் வயர்களை சீரமைத்தனர். அதன்பிறகு, எக்ஸ்பிரஸ் ரயில்கள் சென்னை சென்றன. சிக்னல் வயர் துண்டிப்பு காரணமாக அரை மணி நேரம் ரயில் சேவை பாதிக்கப்பட்டது. அண்ணனுர் ரயில்வே பாதுகாப்பு படையினர் சிக்னல் வயர்கள் எப்படி அறுந்தது என விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:
Avadi signal wires disconnection express train service ஆவடி சிக்னல் வயர்கள் துண்டிப்பு எக்ஸ்பிரஸ் ரயில்கள் சேவைமேலும் செய்திகள்
நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒருவர் உயிரிழப்பு; தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 2,658 பேருக்கு கொரோனா: சுகாதாரத்துறை அறிக்கை..!
சென்னையில் ஜூலை 8-ம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
படிக்கும் காலத்தில் அரசியல் உணர்வோடு வளரவேண்டும்: மாணவர்களுக்கு அமைச்சர் பொன்முடி வேண்டுகோள்
தண்ணீர் தொட்டி சுத்தம் செய்யும் போது விபரீதம்; மின்சாரம் பாய்ந்து வாலிபர் பலி
கூடுவாஞ்சேரி அருகே மறியல் போராட்டத்தால் பரபரப்பு, டாரஸ் லாரி மோதி பெண் பலி; 30 அடி தூரத்துக்கு இழுத்து சென்ற அவலம்
தந்தை நினைவாக வைத்திருந்த வைரக்கல் பதித்த ரூ1.50 லட்சம் மதிப்புள்ள தங்கப்பேனா திருட்டு: காங்கிரஸ் எம்.பி. விஜய் வசந்த் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார்
தொடர் கனமழை : சிட்னி நகரத்தை சூழ்ந்த வெள்ளம்.. 50 ஆயிரம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற அறிவுறுத்தல்..
மெக்சிகோவில் விநோதம்.! பெண் முதலையை முத்தம் கொடுத்து மணந்த மேயர்!!
தோண்ட தோண்ட சடலங்கள்.. மணிப்பூரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்வு!!
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!
கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!