சிறப்பாக பணியாற்றும் குதிரைப்படையை சேர்ந்த 5 பெண் காவலர்களுக்கு பாராட்டு: கமிஷனர் சங்கர் ஜிவால் வெகுமதியும் வழங்கினார்
2022-01-18@ 01:34:37

சென்னை: சென்னை மாநகர குதிரைப்படையில் சிறப்பாக பணியாற்றி வரும் 5 பெண் காவலர்களை நேரில் அழைத்து போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் பாராட்டு தெரிவித்தார். சென்னை குதிரைபடை தற்போது 27 குதிரைகளுடன் இயங்கி வருகிறது. இந்த 27 குதிரைகளும் காவலர்கள் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த பிரிவிரில் ஒரு உதவி ஆய்வாளர் மற்றும் 25 ஆண் காவலர்கள், 5 பெண் காவலர்கள் பணியாற்றி வருகின்றனர். குதிரைகளை முறையாக பராமரித்து, குதிரைகள் மீது அமர்ந்து பாதுகாப்பு பணிகள், ரோந்து பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக முதல் நிலை பெண் காலவர்களான ஜாஸ்மின், சுகன்யா, மாளவிகா, புனிதா, மஹாலட்சுமி ஆகிய 5 பெண் காவலர்கள் சிறப்பாக பணியாற்றி வருகின்றனர்.
2022ம் ஆண்டுக்கான 39வது அகில இந்திய காவல் குதிரைப்படை விளையாட்டு போட்டிக்கு குதிரையுடன் தீவிர பயிற்சியும் 5 பெண் காவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர். எனவே சிறப்பாக பணியாற்றி வரும் 5 பெண் காவலர்களை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் நேற்று நேரில் அழைத்து பாராட்டினார். அதேபோல், புது வண்ணாரப்பேட்டை பகுதியில் சாலையில் கிடந்த ரூ.52 ஆயிரம் பணத்தை மேற்கு வங்கத்தை சேர்ந்த மிதின் மொல்லா(33) என்பவர் எடுத்து தன்து நண்பர் உதவியுடன் புது வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் நேர்மையாக செயல்பட்டு ரூ.52 ஆயிரம் பணத்தை காவல் நியைத்தில் ஒப்படைத்த வடமாநில வாலிபரை நேற்று கமிஷனர் அலுவலகத்திற்கு நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார்.
Tags:
Excellent serving cavalry 5 female guard commendation Commissioner Shankar Jiwal சிறப்பாக பணியாற்றும் குதிரைப்படை 5 பெண் காவலர் பாராட்டு கமிஷனர் சங்கர் ஜிவால்மேலும் செய்திகள்
சொத்துக்காக தொழிலதிபரை கடத்திய வழக்கு போலீஸ் உதவி கமிஷனருக்கு நிபந்தனை முன்ஜாமீன்: உயர் நீதிமன்றம் உத்தரவு
விஐடி குழும இன்டர்நேஷனல் பள்ளி திறப்பு விழா: தாய்மொழியில் பேசுவதை ஊக்குவிக்க வேண்டும்: துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு பேச்சு
அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீது அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்குக்கு தடை: உயர் நீதிமன்றம் உத்தரவு
தகுதி தேர்வு எழுதி காத்திருப்பவர்களை கொண்டு ஆசிரியர் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்: அண்ணாமலை கோரிக்கை
தற்காலிக ஆசிரியர் பணி நியமன முறையை கைவிட வேண்டும்: விஜயகாந்த் அறிக்கை
ஓடிடியில் வெளியாகிறது விக்ரம்
ஆச்சர்யமூட்டும் கலைநயம்!: அமெரிக்கா சியாட்டெலில் அமைந்துள்ள கண்ணாடி பூங்காவின் வியக்க வைக்கும் புகைப்படங்கள்..!!
அமெரிக்காவில் ரயில் தடம் புரண்டு 3 பேர் பரிதாப சாவு; 50 பேர் காயம்
அசாம் வெள்ளப்பெருக்கு: 135 பேர் உயிரிழந்த நிலையில் மீட்புப்பணிகள் தீவிரம்
ஊர் சுற்றலாம் வாங்க!: உள்ளம் கொள்ளை கொள்ளும் அழகான இந்திய சுற்றுலா இடங்களின் புகைப்பட தொகுப்பு..!!
உக்ரைனில் 1,000 பேர் இருந்த மாலில் ரஷ்யா ஏவுகணை தாக்குதல்: 16 பேர் பலி... 59 பேர் படுகாயம்;