மகரஜோதிக்கு பின்னரும் சபரிமலையில் கட்டுக்கடங்காத பக்தர்கள்
2022-01-17@ 16:43:35

திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலில் பிரசித்தி பெற்ற மகரவிளக்கு பூஜை கடந்த 14ம் தேதி நடந்தது. அன்று மாலை லட்சக்கணக்கில் குவிந்த ஐயப்ப பக்தர்கள் பொன்னம்பலமேட்டில் மகர ஜோதியை தரிசனம் செய்தனர். தொடர்ந்து இன்று வரை பக்தர்கள் திருவாபரணத்துடன் வீற்றிருக்கும் ஐயப்பனை தரிசிக்கலாம். நாளை (18ம் தேதி) வரை பக்தர்களுக்கு நெய்யபிஷேகம் செய்யவும் அனுமதி உண்டு. அதனை தொடர்ந்து 19ம் தேதி இரவு வரை மட்டுமே பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய முடியும். மறுநாள் (20ம் தேதி) காலை 6.30 மணிக்கு கோயில் நடை சாத்தப்படுகிறது.
அன்றுடன் 2021-2022ம் வருடத்துக்கான மண்டல, மகர விளக்கு காலம் நிறைவடைகிறது. வழக்கமாக மகரவிளக்கு பூஜை முடிந்த பிறகு சபரிமலைக்கு வருகின்ற பக்தர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து விடும். ஆனால் இந்த முறை மகரவிளக்கு பூஜை முடிந்த பின்னரும் கடந்த 3 தினங்களாக சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் கட்டுக் கடங்காமல் உள்ளது. சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
மேலும் செய்திகள்
ராஜஸ்தானின் உதய்பூரில் டெய்லர் கொலையை தடுக்கத் தவறியதாக உதய்பூர் உதவி ஆய்வாளர் சஸ்பெண்ட்..!!
பீகாரில் ஒரே நாளில் மின்னல் தாக்கி 16 பேர் பலி... உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு தலா ரூ.4 லட்சம் இழப்பீடு அறிவிப்பு!!
டெய்லர் கொலையை தடுக்கத் தவறியதாக உதய்பூர் தன்மண்டி காவல் நிலைய உதவி ஆய்வாளர் சஸ்பெண்ட்
தப்பிக்குமா உத்தவ் தாக்கரே அரசு!: ஆளுநரின் நம்பிக்கை வாக்கெடுப்பு உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தது சிவசேனா..!!
சிபிஎஸ்இ 10,12-ம் வகுப்பு தேர்வு முடிவு ஜூலையில் வெளியீடு: ஒன்றிய கல்வித்துறை அமைச்சகம் தகவல்..!!
இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா ... சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 1 லட்சத்தை நெருங்கியது; அதிர்ச்சி தரும் ரிப்போர்ட்!!
அமெரிக்காவில் ரயில் தடம் புரண்டு 3 பேர் பரிதாப சாவு; 50 பேர் காயம்
அசாம் வெள்ளப்பெருக்கு: 135 பேர் உயிரிழந்த நிலையில் மீட்புப்பணிகள் தீவிரம்
ஊர் சுற்றலாம் வாங்க!: உள்ளம் கொள்ளை கொள்ளும் அழகான இந்திய சுற்றுலா இடங்களின் புகைப்பட தொகுப்பு..!!
உக்ரைனில் 1,000 பேர் இருந்த மாலில் ரஷ்யா ஏவுகணை தாக்குதல்: 16 பேர் பலி... 59 பேர் படுகாயம்;
மெக்சிகோவில் நூற்றுக்கணக்கான ஒரே பாலின ஜோடிகளுக்கு ஒன்றாக திருமணம்..!!