குடியரசு தின விழா அணிவகுப்பில் தமிழக ஊர்தி நிராகரிப்பு... சீறிய கனிமொழி : மதுரை எம்.பி.சு. வெங்கடேசன் கண்டனம்!!
2022-01-17@ 14:34:50

டெல்லி : வரும் 26ம் தேதி டெல்லியில் குடியரசு தின விழா அணிவகுப்பு நடைபெறுகிறது. இந்த விழாவில் இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலங்களின் சிறப்புகளை விளக்கும் வகையில் அந்தந்த மாநிலங்கள் சார்பில் அலங்கார ஊர்திகள் இடம் பெறும். தமிழ்நாடு அரசு சார்பிலும் அலங்கார ஊர்தி பங்குபெறும். ஆனால் அந்த அலங்கார வாகன ஊர்திக்கு மத்திய அரசு அனுமதி மறுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.தமிழ்நாடு அலங்கார ஊர்தியில் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி, வீரமங்கை வேலுநாச்சியார், பாரதியார் ஆகியோரின் சிலைகல் இடம்பெற்றிருந்தன. ஆனால் இவர்கள் பிரபலமான சுதந்திர போராட்ட வீரர்கள் இல்லை எனவும், இவர்களை சர்வதேச தலைவர்களுக்கு தெரியாது எனக் கூறி மத்திய அரசு அதிகாரிகள் நிராகரித்ததாக கூறப்படுகிறது.
இதற்கு திமுக மகளிரணி தலைவர் கனிமொழி கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளார்.இதுகுறித்து ட்வீட் செய்துள்ள அவர், 'குடியரசு தின விழாவிற்காக வடிவமைக்கப்பட்ட தமிழகத்தின் அலங்கார ஊர்தியை நிராகரித்த ஒன்றிய அரசின் செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது. வேலுநாச்சியார், வ.உ.சி., பாரதியார் போன்றோரின் தியாகங்கள் தமிழ் மக்கள் ஒவ்வொருவரின் வாழ்விலும் கலந்திருக்கிறது. இவர்களை பற்றிய ஒன்றிய அரசின் அறியாமை ஒட்டுமொத்த தமிழகத்தை அவமதிக்கும் விதத்தில் இருக்கிறது. இந்தியா என்பது அனைவருக்குமானது, வடமாநிலங்களால் மட்டும் ஆனது கிடையாது. ஒன்றிய அரசு உடனடியாக இந்த ஜனநாயகத்திற்கு எதிரான நடவடிக்கையை திரும்பப்பெற வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் மதுரை எம்.பி. சு வெங்கடேசன் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், தமிழகத்தின் வீரமங்கை வேலுநாச்சியாரும், சுதேசித் தலைவன் வ உ சி யும் , மக்கள் கேரளத்தின் நாராயண குருவையும் நிராகரிக்க நீங்கள் யார் ?
குடியரசுதின விழாவில் இதையெல்லாம் விடுத்து விட்டு வேறெதை அனுமதிப்பீர் !
கோட்சோக்களையும் - கோல்வார்க்கர்களையுமா ?,' எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகள்
பிணிநீக்கி நம் உயிர்காக்கும் மருத்துவர்களைப் போற்றிடுவோம் :முதல்வர் மு.க.ஸ்டாலின், ஓபிஎஸ் தேசிய மருத்துவர்கள் தின வாழ்த்து!!
பள்ளிகளில் மாஸ்க் கட்டாயம்..உடல் வெப்பநிலையை பரிசோதிக்க வேண்டும்... பள்ளிக்கல்வித்துறை அதிரடி!!
ஜூலை 01: பெட்ரோல் விலை ரூ. 102.63, டீசல் விலை ரூ.94.24-க்கு விற்பனை
ஓபிஎஸ் கடிதத்தை எடப்பாடி பழனிசாமி நிராகரித்ததால் உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவினர் சுயேச்சையாக போட்டி; கட்சி தொண்டர்கள் கடும் அதிருப்தி
பெரியபாளையம் பவானியம்மனுக்கு காணிக்கையாக வந்த 130 கிலோ பொன் நகைளை அமைச்சர் சேகர்பாபு வங்கி மேலாளரிடம் ஒப்படைத்தார்
வானகரத்தில் மீண்டும் அதிமுக பொதுக்குழு கூட்டம்; பந்தல் அமைக்கும் பணிகள் துவங்கியது
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!
கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!
நுபுர் சர்மாவை ஆதரித்த டெய்லர் தலை துண்டித்து கொடூர கொலை ராஜஸ்தானில் வன்முறை, போராட்டம்!!
ஆச்சர்யமூட்டும் கலைநயம்!: அமெரிக்கா சியாட்டெலில் அமைந்துள்ள கண்ணாடி பூங்காவின் வியக்க வைக்கும் புகைப்படங்கள்..!!
அமெரிக்காவில் ரயில் தடம் புரண்டு 3 பேர் பரிதாப சாவு; 50 பேர் காயம்