SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஒட்டுமொத்த கலை உலகிற்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு: பிர்ஜூ மகராஜ் மறைவுக்கு பிரதமர் மோடி, கமல் இரங்கல்!!

2022-01-17@ 12:02:18

டெல்லி : கதக் நடன கலைஞர் பிர்ஜு மகாராஜ்  டெல்லியில் உடல் நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 83. நாட்டின் இரண்டாவது உயரிய விருதான பத்ம விபூஷன் உள்ளிட்ட பல விருதுகளை பெற்ற இவர் நேற்றிரவு டெல்லியில் தனது வீட்டில் திடீரென மயங்கி விழுந்துள்ளார்.  இதையடுத்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில், இவர் மாரடைப்பால் உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.  கதக் நடன கலைஞர் பிர்ஜு மகாராஜூக்கு ஏற்கனவே டயாலிசிஸ் செய்யப்பட்டு வந்துள்ளது. கதக் நடன கலைஞர் பிர்ஜு மகாராஜ்  நடிகர் கமல்ஹாசன் இயக்கி நடித்த  விஸ்வரூபம் படத்தில் உன்னை காணாத நான் இன்று நானில்லையே என்ற பாடலுக்கு நடன வடிவமைப்பு செய்தவர்.

இந்நிலையில் பிரதமர் மோடி  தனது ட்விட்டர் பக்கத்தில், 'உலகம் முழுவதும் இந்திய நடனக் கலைக்கு தனித்துவமான அங்கீகாரத்தை பெற்றுத் தந்தவர் பண்டிட் பிர்ஜு மகராஜ் . பண்டிட் பிர்ஜு மகாராஜ் மறைவு ஒட்டுமொத்த கலை உலகிற்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு ' என்று பதிவிட்டுள்ளார்.

அதேபோல் நடிகரும், மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல் ஹாசன், 'ஈடு இணையற்ற நடனக் கலைஞரான பண்டிட் பிர்ஜூ மகராஜ் மறைந்தார்.ஓர் ஏகலைவனைப் போல பல்லாண்டுகள் தொலைவிலிருந்து அவதானித்தும்,விஸ்வரூபம் படத்திற்காக அருகிருந்தும் நான் கற்றுக்கொண்டவை ஏராளம்.இசைக்கும் நாட்டியத்திற்கும் தன் ஆயுளை அர்ப்பணித்துக்கொண்டவரே, ‘உன்னை காணாது நான் இன்று நானில்லையே’' என்று ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • porkappal1

    முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்

  • france_elizabeth

    30 ஆண்டுகளுக்கு பிறகு பிரான்சில் பெண் பிரதமர் பதவியேற்பு..!!

  • assam-rain-17

    அசாமில் அடித்து நொறுக்கிய கனமழை!: வெள்ளத்தில் மூழ்கிய ரயில் நிலையம்...2 லட்சம் பேர் பாதிப்பு..!!

  • ramnjamaiii

    ஜமைக்காவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்: அம்பேதகர் சதுக்கத்தை திறந்து வைத்து மரக்கன்றை நட்டார்!!

  • pudha_purnima

    உலகம் முழுவதும் புத்த பூர்ணிமா கோலாகல கொண்டாட்டம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்