இந்தியாவில் யாரையும் கொரோனா தடுப்பூசி செலுத்த கட்டாயப்படுத்த முடியாது : ஒன்றிய அரசு
2022-01-17@ 11:05:40

டெல்லி : இந்தியாவில் யாரையும் கொரோனா தடுப்பூசி செலுத்த கட்டாயப்படுத்த முடியாது என உச்ச நீதிமன்றத்தில் ஒன்றிய அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது. எவாரா பவுண்டேஷன் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் ஒரு பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், மாற்றுத்திறனாளிகளுக்காக வீடு தேடிச் சென்று தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்றும் தடுப்பூசி சான்றிதழ்களை பொது இடங்களில் காண்பிக்கும் அவசியத்திலிருந்து மாற்றுத் திறனாளிகளுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
இந்த வழக்கு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் ஒன்றிய அரசு சார்பில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், 'இந்தியாவில் யாரையும் கொரோனா தடுப்பூசி செலுத்த கட்டாயப்படுத்த முடியாது என ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகம் மற்றும் ஒன்றிய அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெருந்தொற்றை கருத்தில் கொண்டே பொதுமக்கள் நலன் கருதி தடுப்பூசி செலுத்தும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என பத்திரிக்கை, சமூகவலைதளம் மற்றும் தொலைக்காட்சி உள்பட பல்வேறு வழிமுறைகள் மூலம் நாட்டு மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டு வருகிறது.ஆனால், தனிப்பட்ட நபரின் விருப்பத்துக்கு மாறாகவும் தடுப்பூசியை வலுக்கட்டாயமாக செயல்படுத்த முடியாது.அதேபோல், மாற்றுத் திறனாளிகள் தடுப்பூசி சான்றிதழை கையோடு எடுத்துச் செல்லுமாறு எவ்வித உத்தரவையும் ஒன்றிய அரசு பிறப்பிக்கவில்லை,' என்று தெரிவித்துள்ளது.
மேலும் செய்திகள்
முகமது நபிகள் குறித்து நுபுர் சர்மா சர்ச்சை கருத்து; பிரதமர் மோடியும் பொறுப்பேற்க வேண்டும்: ராகுல் காந்தி கருத்து
கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூ. அலுவலகம் மீது வெடிகுண்டு வீச்சு: போலீஸ் குவிப்பால் பதற்றம்
இருதரப்பு ஒப்பந்தத்தை அமல்படுத்த ரஷ்ய அதிபர் புடினுடன் மோடி போனில் பேச்சு
பிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் ஏவப்பட்ட செயற்கைக்கோளை சுற்றுப் பாதையில் நிலை நிறுத்தி ஸ்டார்ட் அப் அசத்தல்: விண்வெளி துறையில் புதிய மைல்
சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறி நாட்டை தீக்கிரையாக்கி விட்டார்: நுபுர் சர்மாவுக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்
என்னை காதலித்தவர்கள் ஓடிப்போனது ஏன்? சுஷ்மிதா சென் பதில்
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!
கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!
நுபுர் சர்மாவை ஆதரித்த டெய்லர் தலை துண்டித்து கொடூர கொலை ராஜஸ்தானில் வன்முறை, போராட்டம்!!
ஆச்சர்யமூட்டும் கலைநயம்!: அமெரிக்கா சியாட்டெலில் அமைந்துள்ள கண்ணாடி பூங்காவின் வியக்க வைக்கும் புகைப்படங்கள்..!!
அமெரிக்காவில் ரயில் தடம் புரண்டு 3 பேர் பரிதாப சாவு; 50 பேர் காயம்