விடாமல் அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்; உலக அளவில் பாதிப்பு எண்ணிக்கை 32.86 கோடியாக உயர்வு.! 55.57 லட்சம் பேர் உயிரிழப்பு
2022-01-17@ 08:09:07

ஜெனீவா; உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 32.86 கோடியாக அதிகரித்துள்ளது. சீனாவின் வுகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் 221 நாடுகள் பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.
கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் வைரஸ் உருமாற்றமடைந்து பாதிப்பு அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 32 கோடியே 86 லட்சத்து 58 ஆயிரத்து 754 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 5 கோடியே 57 லட்சத்து 3 ஆயிரத்து 830 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 26 கோடியே 73 லட்சத்து 97 ஆயிரத்து 338 பேர் குணமடைந்துள்ளனர். ஆனாலும், கொரோனா வைரசால் உலகம் முழுவதும் இதுவரை 55 லட்சத்து 57 ஆயிரத்து 586 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் செய்திகள்
கொலம்பியா நாட்டில் உள்ள சிறையில் ஏற்பட்ட தீ விபத்தில் 50 கைதிகள் உடல் கருகி உயிரிழப்பு..பலருக்கு பலத்த தீக்காயம்!!
லாரியில் அடைக்கப்பட்ட 51 அகதிகள் மூச்சுத் திணறி பலியான சம்பவம்... இதயத்தையே நொறுக்கிவிட்டதாக அமெரிக்க அதிபர் ஜோபிடன் வேதனை!!
அமெரிக்க டாலரை ஓரம் கட்ட அதிரடி; சிறு நாடுகளை வளைக்க சீனா அடுத்த சதி திட்டம்; யுவானில் கடன் வழங்க புதிய நிதியம்
பொது விவாதம், தகவல் பரவல் உட்பட கருத்து சுதந்திரத்துக்கு பாதுகாப்பு; ஜி7 மாநாட்டில் மோடி உறுதி
ரணிலின் நீண்ட போராட்டத்துக்கு வெற்றி.! அதிபரின் அதிகாரங்களை குறைக்கும் சட்டத்துக்கு அமைச்சரவை ஒப்புதல்: இலங்கை நாடாளுமன்றத்தில் விரைவில் தாக்கல்
மீண்டும் அதிரடி தாக்குதல் உக்ரைன் வணிக வளாகத்தில் ரஷ்ய படைகள் ஏவுகணை தாக்குதல்; 16 பேர் பலி; 59 பேர் காயம்
அமெரிக்காவில் ரயில் தடம் புரண்டு 3 பேர் பரிதாப சாவு; 50 பேர் காயம்
அசாம் வெள்ளப்பெருக்கு: 135 பேர் உயிரிழந்த நிலையில் மீட்புப்பணிகள் தீவிரம்
ஊர் சுற்றலாம் வாங்க!: உள்ளம் கொள்ளை கொள்ளும் அழகான இந்திய சுற்றுலா இடங்களின் புகைப்பட தொகுப்பு..!!
உக்ரைனில் 1,000 பேர் இருந்த மாலில் ரஷ்யா ஏவுகணை தாக்குதல்: 16 பேர் பலி... 59 பேர் படுகாயம்;
மெக்சிகோவில் நூற்றுக்கணக்கான ஒரே பாலின ஜோடிகளுக்கு ஒன்றாக திருமணம்..!!