காலையில் வாங்கிய லாட்டரிக்கு மாலையில் ₹12 கோடி பரிசு : கோடீஸ்வரரான பெயின்ட் தொழிலாளி
2022-01-17@ 02:42:45

திருவனந்தபுரம் : கேரள அரசின் கிறிஸ்துமஸ், புத்தாண்டு பம்பர் லாட்டரி விற்பனை கடந்த இரு மாதங்களுக்கு முன் தொடங்கியது. இதன் முதல் பரிசு ₹ 12 கோடி. டிக்கெட் விலை ₹ 300. முதலில் 24 லட்சம் டிக்கெட்டுகள் அச்சடிக்கப்பட்டன. ஒரு சில வாரங்களிலேயே அனைத்தும் விற்பனையானது. இதையடுத்து, மேலும் 9 லட்சம் டிக்கெட்டுகள் அச்சடிக்கப்பட்டன. அதுவும் விற்பனையானதை தொடர்ந்து கூடுதலாக 8.34 லட்சம் டிக்கெட்டுகள் அச்சடிக்கப்பட்டன.
இந்நிலையில், இந்த லாட்டரி குலுக்கல் நேற்று மாலை திருவனந்தபுரத்தில் நடந்தது. முதல் பரிசு ₹12 கோடி XG 218582 என்ற எண் கொண்ட லாட்டரிக்கு கிடைத்தது. இந்த லாட்டரி கோட்டயம் மாவட்டத்தில் விற்பனையானது தெரிய வந்தது. அதை வாங்கிய அதிர்ஷ்டசாலி கோட்டயம் ஐமனம் என்ற பகுதியை சேர்ந்த சதானந்தன் என தெரிய வந்துள்ளது.
பெயின்டிங் தொழிலாளியான இவர் நேற்று காலைதான் இந்த டிக்கெட்டை அருகில் உள்ள ஒரு கடையில் வாங்கியுள்ளார். காலையில் வாங்கிய டிக்கெட்டுக்கு மாலையில் இவருக்கு ₹12 கோடி முதல் பரிசு கிடைத்துள்ளது. சதானந்தனுக்கு ராஜம்மா என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர்.
மேலும் செய்திகள்
பிரதமர் யார் நலனின் அக்கறை காட்டுகிறார்?.. ஜிஎஸ்டி வரி குறித்து ராகுல் காந்தி கண்டனம்..!
தற்கொலை செய்து கொண்ட நடிகர் சுஷாந்த் உடன் தங்கியவருக்கு ஜாமின்: மும்பை ஐகோர்ட் உத்தரவு
பஞ்சாப் பாடகர் கொலை வழக்கு; காரில் ஆட்டம் போட்ட குற்றவாளிகள் கைது: டெல்லி போலீஸ் அதிரடி
பாஜக ஜனாதிபதி வேட்பாளருக்கு ஹேமந்த் சோரனின் ஆதரவு கிடைக்குமா?.. பழங்குடியினர் கட்சி என்பதால் எதிர்பார்ப்பு
பெண் தெய்வம் குறித்த சர்ச்சை: லீனா மீது உ.பி போலீஸ் வழக்கு
அரசியல் நமக்கு ஒத்துவராது: பாலிவுட் நடிகர் கருத்து
தொடர் கனமழை : சிட்னி நகரத்தை சூழ்ந்த வெள்ளம்.. 50 ஆயிரம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற அறிவுறுத்தல்..
மெக்சிகோவில் விநோதம்.! பெண் முதலையை முத்தம் கொடுத்து மணந்த மேயர்!!
தோண்ட தோண்ட சடலங்கள்.. மணிப்பூரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்வு!!
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!
கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!