சில்லி பாயிண்ட்
2022-01-17@ 02:26:59

* ஐசிசி யு-19 உலக கோப்பை ஒருநாள் போட்டித் தொடரின் பி பிரிவு லீக் ஆட்டத்தில் தென் ஆப்ரிக்காவுடன் மோதிய இந்திய அணி 45 ரன் வித்தியாசத்தில் வென்றது. இந்தியா 46.5 ஓவரில் 232 ரன் (கேப்டன் யஷ் துல் 82, கவுஷல் 35, ரஷீத் 31, நிஷாந்த் 27); தென் ஆப்ரிக்கா 45.4 ஓவரில் 187 ரன் (விக்கி ஆஸ்வால் 5 விக்கெட், ராஜ் பவா 4 விக்கெட்).
* துருக்கியில் நடந்த வலுதூக்கும் போட்டியில் நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை சேர்ந்த விவசாயியின் மகள் இலக்கியா வெள்ளிப் பதக்கம் வென்றார்.
* டெஸ்ட் போட்டிகளுக்கான கேப்டன் பொறுப்பில் இருந்து கோஹ்லி விலகியுள்ள நிலையில், அவருக்கு பதிலாக விக்கெட் கீப்பர்/பேட்ஸ்மேன் ரிஷப் பன்ட் புதிய கேப்டனாக நியமிக்கப்பட வேண்டும் என்று முன்னாள் கேப்டன் கவாஸ்கர் விருப்பம் தெரிவித்துள்ளார்.
* இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவர் நரிந்தர் பத்ரா மற்றும் அவரது மனைவிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
* ஆஷஸ் தொடரில் 0-4 என்ற கணக்கில் படுதோல்வியை சந்தித்தாலும், டெஸ்ட் போட்டிகளுக்கான இங்கிலாந்து அணி கேப்டன் பொறுப்பில் தொடர்ந்து நீடிக்க உறுதியுடன் உள்ளதாக ஜோ ரூட் தெரிவித்துள்ளார்.
* கேப்டன் பதவியை ராஜினாமா செய்தது கோஹ்லியின் தனிப்பட்ட முடிவு. கிரிக்கெட் வாரியம் அதை மதிக்கிறது என்று பிசிசிஐ தலைவர் கங்குலி கூறியுள்ளார்.
மேலும் செய்திகள்
விம்பிள்டன் டென்னிஸ் 4வது சுற்றில் அனிசிமோவா
சதம் விளாசினார் ஜடேஜா முதல் இன்னிங்சில் இந்தியா 416 ரன் குவிப்பு
இம்மாதம் ஐசிசி கூட்டம் ஐபிஎல் ஆட்டங்கள் அதிகரிக்குமா?
மகளிர் உலக கோப்பை ஹாக்கி முதல் ஆட்டத்தில் ஸ்பெயின் வெற்றி: இங்கிலாந்து - இந்தியா இன்று மோதல்
ஒரே ஓவரில் 35 ரன்! பும்ரா உலக சாதனை
விம்பிள்டன் டென்னிஸ்: 3வது சுற்றில் மரியா சக்கரி ஏஞ்சலிக் கெர்பர் தோல்வி
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!
கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!
நுபுர் சர்மாவை ஆதரித்த டெய்லர் தலை துண்டித்து கொடூர கொலை ராஜஸ்தானில் வன்முறை, போராட்டம்!!
ஆச்சர்யமூட்டும் கலைநயம்!: அமெரிக்கா சியாட்டெலில் அமைந்துள்ள கண்ணாடி பூங்காவின் வியக்க வைக்கும் புகைப்படங்கள்..!!
அமெரிக்காவில் ரயில் தடம் புரண்டு 3 பேர் பரிதாப சாவு; 50 பேர் காயம்