சென்னையில் ஊரடங்கை மீறியதாக 5,803 பேர் மீது வழக்கு பதிவு : அபராதமாக ₹11.7 லட்சம் வசூல்
2022-01-17@ 01:10:40

சென்னை : சென்னை முழுவதும் கடந்த 31 மணி நேரம் கொரோனா முழு ஊரடங்கின் விதிகளை மீறியது உள்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் மொத்தம் 5,803 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து அபராதமாக ₹11.7 லட்சம் வசூலித்தனர். கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் 31 மணி நேரம் முழு ஊரடங்கு நேற்று முன்தினம் இரவு 10 மணி முதல் அமல்படுத்தப்பட்டது. இதற்காக சென்னை மாநகரம் முழுவதும் 312 இடங்களில் போலீசார் தடுப்புகள் அமைத்து தீவிர வாகன சோதனை என 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
அந்த வகையில் சனிக்கிழமை இரவு 10 மணி முதல் நேற்று அதிகாலை 5 மணி வரை அதாவது 31 மணி நேரம் தொடர் முழு ஊரடங்கு நடைபெற்றது. இதில் முழு ஊரடங்கில் கொரோனா விதிகளை மீறியதாக 103 பேர் மீது வழக்கு பதிவு செயய்ப்பட்டது. அதேபோல், அத்தியாவசிய தேவையின்றி வெளியே சுற்றிய நபர்களிடம் இருந்து 280 பைக்குகள் 16 ஆட்டோக்கள், 11 இலகுரக வாகனம் என மொத்தம் 307 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும், முகக்கவசம் அணியாமல் வெளியே சுற்றியதாக 5,469 பேர் மீது வழக்கு பதிவு செய்து அவர்களிடம் இருந்து அபராதமாக 10 லட்சத்து 93 ஆயிரத்து 800 ரூபாய் வசூலிக்கப்பட்டது. சமூக இடைவெளி கடைப்பிடிக்காத நபர்கள் மீது 27 வழக்குகள் பதிவு செய்து அவர்களிடம் இருந்து ₹13,500 பணம் அபராதமாக வசூலிக்கப்பட்டது.
அந்த வகையில் 31 மணி நேரம் தொடர் முழு ஊரடங்கில் சென்னை மாநகரம் முழுவதும் மொத்தம் 5,803 பேர் மீது வழக்கு பதிவு செய்து அபராதமாக 11 லட்சத்து 7 ஆயிரத்து 300 ரூபாய் மாநகர காவல் துறை வசூலித்துள்ளது.
மேலும் செய்திகள்
அண்ணாநகர் மண்டலத்தில் 400 பேருக்கு கொரோனா: தடுப்பு பணிகள் தீவிரம்
கோடம்பாக்கம் வள்ளியம்மாள் தோட்டத்தில் ஆக்கிரமிப்புகளை 2 வாரங்களில் அகற்ற வேண்டும்: தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு
சொத்து வரி செலுத்த சிறப்பு ஏற்பாடு: மாநகராட்சி தகவல்
சென்னையில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் ரூ.1.29 கோடி மதிப்பீட்டில் 26 செயற்கை நீரூற்றுகள்: வெளிநாடுகளில் உள்ளதைப்போல் ரம்யமான காட்சி; சிறியவர் முதல் பெரியவர்கள் வரை ரசிக்கின்றனர்
தொழிலதிபர் மீது வழக்கு ஸ்ரீபெரும்புதூர் போலீசாரிடம் சிபிசிஐடி விசாரணை: உயர் நீதிமன்றம் உத்தரவு
ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிறுநீரக ஆபரேஷன் செய்தவர்களில் 99 சதவீதம் பேர் நலமாக உள்ளனர்: அதிகாரி தகவல்
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!
கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!
நுபுர் சர்மாவை ஆதரித்த டெய்லர் தலை துண்டித்து கொடூர கொலை ராஜஸ்தானில் வன்முறை, போராட்டம்!!
ஆச்சர்யமூட்டும் கலைநயம்!: அமெரிக்கா சியாட்டெலில் அமைந்துள்ள கண்ணாடி பூங்காவின் வியக்க வைக்கும் புகைப்படங்கள்..!!
அமெரிக்காவில் ரயில் தடம் புரண்டு 3 பேர் பரிதாப சாவு; 50 பேர் காயம்