தேசிய திறனாய்வு தேர்வுக்கு 19ம் தேதி ஹால்டிக்கெட்
2022-01-17@ 00:59:25

சென்னை : பத்தாம் வகுப்பு படித்த மாணவர்களுக்காக நடத்தப்படும் தேசிய திறனாய்வுத் தேர்வுக்கான ஹால்டிக்கெட்டுகள் 19ம் தேதி முதல் இணைய தளத்தில் பதிவிறக்கம் செய்யலாம் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மாநில அளவிலான தேசிய திறனாய்வு தேர்வு அரசால் நடத்தப்படுகிறது. பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் எழுதும் இந்த தேர்வில் வெற்றி பெறும் மாணவ மாணவியர் பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகள் படிப்பதற்காக ஒவ்வொரு மாதமும் ₹1250, உயர்கல்விக்கு செல்லும்போது மாதம் ₹2000 என உதவித் தொகை வழங்கப்படுகிறது. இது தவிர ஆய்வுப் படிப்புகளுக்கும் உதவித் தொகை வழங்கப்படுகிறது.
இதன்படி இந்த ஆண்டுக்கான தேசிய அளவிலான திறனாய்வுத் தேர்வு 2022 ஜனவரி மாதம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கான அறிவிப்பு கடந்த அக்டோபர் 29ம் தேதி வெளியானது. தற்போது கொரோனா பரவல் காரணமாக இந்த தேர்வு ஜனவரி 29ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்த தேர்வில் இடம் பெறும் கேள்வித்தாள்கள், 9, 10ம் வகுப்புகளுக்கான பாடத்திட்டத்தின் அடிப்படையிலும், சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் இருந்தும் கேள்விகள் இடம் பெறும். இந்த தேர்வுக்கு பள்ளிகள் மூலம் விண்ணப்பித்த மாணவ மாணவியர் தங்களுக்கான ஹால்டிக்கெட்டுகளை இம்மாதம் 19ம் தேதி முதல் இணைய தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
பாஜ நிர்வாகி வினோஜ் பி.செல்வம் மீதான வழக்கு ரத்து: ஐகோர்ட் உத்தரவு
மின்சாரம் பாய்ந்து பசு மாடு சாவு
கல்வி வேலை வாய்ப்பு ஆலோசனை கூட்டம்: டிஜிபி சைலேந்திரபாபு பங்கேற்பு
வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முற்றுகை
வாடகை உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கன்டெய்னர் லாரி உரிமையாளர்கள் 3வது நாளாக வேலைநிறுத்தம்: தொடரும் பேச்சுவார்த்தை
உயர் அழுத்த மின் இணைப்பு: மின்வாரியம் ஆலோசனை
ஹாட் டாக் பன் சாப்பிடும் போட்டி : 10 நிமிடங்களில் 63 பன்கள் சாப்பிட்டு ஜோய் செஸ்ட்நட் என்பவர் சாம்பியன்..!
தொடர் கனமழை : சிட்னி நகரத்தை சூழ்ந்த வெள்ளம்.. 50 ஆயிரம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற அறிவுறுத்தல்..
மெக்சிகோவில் விநோதம்.! பெண் முதலையை முத்தம் கொடுத்து மணந்த மேயர்!!
தோண்ட தோண்ட சடலங்கள்.. மணிப்பூரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்வு!!
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!