காணும் பொங்கலுக்கு சுற்றுலா தலங்களுக்கு செல்ல தடை: பாஞ்சாலங்குறிச்சி, மணப்பாடு வெறிச்சோடியது
2022-01-16@ 14:41:03

ஓட்டப்பிடாரம்: கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக சுற்றுலா தலங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டதால் பாஞ்சாலங்குறிச்சி வெறிச்சோடி காணப்பட்டது. காணும் பொங்கல் திருநாளையொட்டி பொதுமக்கள் ஏராளமானோர் தங்களின் குழந்தைகள் மற்றும் உறவினர்களோடு மாவட்டத்தில் உள்ள பாஞ்சாலங்குறிச்சி வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு கோட்டை உள்ளிட்ட பல்வேறு சுற்றுலாத்தலங்களுக்குச் சென்று கூடி மகிழ்வது வழக்கம். இந்நிலையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் மாவட்ட நிர்வாகமானது சுற்றுலாத்தலங்களில் மக்கள் கூடுவதற்கு 5 நாட்கள் தடை விதித்ததுள்ளது.
இதனால் பாஞ்சாலங்குறிச்சியில் உள்ள வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு கோட்டைக்கான நுழைவுவாயில் அடைக்கப்பட்டிருந்தது. காணும் பொங்கலை முன்னிட்டு நடைபெறும் கலை நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டிருந்தன. இருப்பினும் திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த மக்கள் ஏமாற்றமடைந்தனர். அவர்கள் கோட்டைக்கு வெளியே உள்ள மரத்தடியில் அமர்ந்தபடி உறவினர்களோடு பேசியும் கொண்டு வந்த உணவுகளை உண்டு மகிழ்ந்தனர்.
மேலும் கோட்டையின் முன்பு பஞ்சாயத்து சார்பில் பராமரிக்கப்படும் விளையாட்டு உபகரணங்களில் சிறார்கள் விளையாடி மகிழ்ந்தனர். உடன்குடி: ஒருபுறம் ஆர்ப்பரிப்பான கடல், மறுபுறம் அமைதியான கடல் என இரு நிலைகளை கொண்டது மணப்பாடு. நீண்ட கடற்பரப்பை கொண்ட இங்கு மிகப்பழமையான தேவாலயம், புனித சவேரியார் தங்கிய குகை, மணற்குன்று, பழமையான கட்டிடங்கள் என ஏராளமானவைகள் உள்ளன. ஏழைகளின் கோவா என்றழைக்கப்படும் மணப்பாட்டிற்கு பல்வேறு பகுதிகளிலிருந்து சுற்றுலா வந்தவர்களை போலீசார் திருப்பி அனுப்பி வைத்தனர்.
நேற்று அதிகாலை முதலே மணப்பாடு ஊர் எல்கையில் குலசேகரன்பட்டினம் இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி தலைமையில் சப்இன்ஸ்பெக்டர் முனியாண்டி மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு சுற்றுலாப்பயணிகளின் வாகனங்களை திருப்பி அனுப்பினர். மேலும் போலீசாருக்கு டிமிக்கி கொடுத்து டூவிலரில் கடற்கரை பகுதிக்கு வந்தவர்களையும் போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர். இதன் காரணமாக எப்போதும் சுற்றுலாப்பயணிகள் நிறைந்து காணப்படும் மணப்பாடு கடற்கரை வெறிச்சோடி காணப்பட்டது.
மேலும் செய்திகள்
முதுகுளத்தூர் அருகே கபடி போட்டியால் இரு கிராமத்தினர் இடையே மோதல்: இருதரப்பையும் சேர்ந்த 400 பேர் மீது வழக்குப்பதிவு
மேற்கு தொடர்ச்சி மலையில் கனமழை கோவை குற்றாலம், ஆழியார் கவியருவியில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலா பயணிகளுக்கு தடை
கடியபட்டணத்தில் கடல் சீற்றம் அலை தடுப்பு சுவரில் தூக்கி வீசப்பட்ட பைபர் வள்ளம்: ஒரு வள்ளம் கடலில் மூழ்கியது
சேலம் ஜங்ஷன் அருகே குறுகலான ரயில்வே தரைப்பாலம் 10 மணி நேரத்தில் மாற்றியமைப்பு: இன்னும் பாதியளவு பாலத்தை சீரமைக்க ஏற்பாடு
தர்மபுரியில் அரசு பஸ் மரத்தில் மோதி விபத்து: 24 பேர் படுகாயம்
வால்பாறையில் தொடர்ந்து நீடித்து வரும் கனமழை காரணமாக வீடு இடிந்து சேதம்
ஹாட் டாக் பன் சாப்பிடும் போட்டி : 10 நிமிடங்களில் 63 பன்கள் சாப்பிட்டு ஜோய் செஸ்ட்நட் என்பவர் சாம்பியன்..!
தொடர் கனமழை : சிட்னி நகரத்தை சூழ்ந்த வெள்ளம்.. 50 ஆயிரம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற அறிவுறுத்தல்..
மெக்சிகோவில் விநோதம்.! பெண் முதலையை முத்தம் கொடுத்து மணந்த மேயர்!!
தோண்ட தோண்ட சடலங்கள்.. மணிப்பூரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்வு!!
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!