பனிப்பொழிவு அதிகரிப்பு: மலர் நாற்றுகளுக்கு பிளாஸ்டிக் போர்வை
2022-01-16@ 12:15:56

ஊட்டி: நீலகிரியில் கடந்த சில தினங்களாக பனிப்பொழிவு அதிகரித்துள்ள நிலையில், தாவரவியல் பூங்கா தொட்டிகளில் வைக்கப்பட்டுள்ள மலர் நாற்றுக்கள் பாதிக்காமல் இருக்க பிளாஸ்டிக் போர்வை கொண்டு மூடப்பட்டுள்ளது. ஆண்டு தோறும் அக்டோபர் மாதம் துவங்கி இரு மாதங்கள் நீர்பனி விழும். நவம்பர் இறுதி வாரம் முதல் பிப்பரவரி இறுதி வரையில் உறைபனி விழும். ஆனால், இம்முறை மழை காரணமாக கடந்த நவம்பர் மாதம் வரை பனிப்பொழிவு காணப்படவில்லை.
கடந்த மாதம் துவக்கம் முதல் நீர்பனியின் காணப்பட்டது. கடந்த மாதம் இறுதி வாரம் முதல் பனிப்பொழிவு அதிகரித்துள்ளது. தற்போது மாவட்டத்தில் நாள் தோறும் உறைபனி காணப்படுகிறது. ஒரு சில நாட்கள் நீர்பனியும் விழுகிறது. பனியின் காரணமாக தாழ்வான பகுதிகள் மற்றும் நீரோடைகளை ஒட்டியுள்ள பகுதிகளில் உள்ள தேயிலை தோட்டங்களில் உள்ள செடிகள் கருக துவங்கின. தேயிலை,மலை காய்கறிகள் மற்றும் மலர் செடிகளை பனியில் இருந்து பாதுகாக்க காலை மற்றும் மாலை நேரங்களில் ஸ்பிரிங்லர் மூலம் விவசாயிகள் தண்ணீர் பாய்ச்சி வருகின்றனர்.
ஊட்டி தாவரவியல் பூங்கா,மரவியல் பூங்கா,ரோஜா பூங்காக்களில் உள்ள அலங்கார செடிகள் மீது கோத்தகிரி மிலார் செடிகளை கொண்டு மூடி பாதுகாக்கப்பட்டு வருகிறது. தாவரவியல் பூங்காவில் உள்ள புல் மைதானம் சேதமடையாத வகையில் புல் மைதானத்திற்கு காலையில் பாப் அப் முறையில் தண்ணீர் பாய்ச்சும் பணியில் பூங்கா ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக நீலகிரியில் உறைபனி தாக்கம் மிக அதிகமாக காணப்படுகிறது.
இதனால், பூங்கா தொட்டிகளில் நடவு செய்யப்பட்டுள்ள மலர் நாற்றுக்கள் பாதிக்காமல் இருக்க பிளாஸ்டிக் போர்வை கொண்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது. பனியின் காரணமாக ஊட்டி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கடும் குளிர் நிலவியது. பனிப்பொழிவு அதிகரித்துள்ள நிலையில், அதிகாலை நேரங்களில் குளிர் வாட்டுகிறது. பகல் நேரங்களில் வெயில் வாட்டினாலும், நிழல் தரும் இடங்களுக்கு சென்றால் குளிர் நிலவுகிறது.
மேலும் செய்திகள்
6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி காதுகேளாதோர் காத்திருப்பு போராட்டம்
சாலை விபத்தில் பிரபல ரவுடி பலி
காட்டு தேவத்தூர் ஊராட்சியில் ஆக்கிரமிப்பின் பிடியில் 150 ஏக்கர் அரசு நிலம்; மீட்டு தர கிராமமக்கள் வலியுறுத்தல்
காஞ்சிபுரம் அருகே குருபகவான் கோயில் கும்பாபிஷேகம்
ஓடிக்கொண்டிருந்த ஆட்டோவில் திடீர் தீ; ஊழியர்கள் தப்பினர்
ஆவடியில் கிடப்பில் போடப்பட்டுள்ளதால் குப்பை கொட்டும் இடமாக மாறிய மழைநீர் கால்வாய்; நடவடிக்கை எடுக்க மக்கள் வலியுறுத்தல்
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!
கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!
நுபுர் சர்மாவை ஆதரித்த டெய்லர் தலை துண்டித்து கொடூர கொலை ராஜஸ்தானில் வன்முறை, போராட்டம்!!
ஆச்சர்யமூட்டும் கலைநயம்!: அமெரிக்கா சியாட்டெலில் அமைந்துள்ள கண்ணாடி பூங்காவின் வியக்க வைக்கும் புகைப்படங்கள்..!!
அமெரிக்காவில் ரயில் தடம் புரண்டு 3 பேர் பரிதாப சாவு; 50 பேர் காயம்