20 கிமீ உயரத்துக்கு பறந்தது சாம்பல் பசிபிக் கடலில் எரிமலை வெடிப்பு
2022-01-16@ 04:18:17

*சுனாமி எச்சரிக்கையால் பீதி
வெலிங்டன் : பசிபிக் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள தீவு நாடுகளில் ஒன்று டொங்கா. தனி நாடாக உள்ள இதன் மொத்த மக்கள்தொகையே ஒரு லட்சத்து 6 ஆயிரம் மட்டும்தான். இதன் நிலப் பகுதியிலும், கடலிலும் ஏராளமான எரிமலைகள் உள்ளன. இவற்றில் ஒன்றின் பெயர், ‘டொங்கா ஹுங்கா ஹாபைய்’. மிகவும் பிரமாண்டமான எரிமலையான இதன் பெரும்பகுதி, பசிபிக் பெருங்கடலுக்கு அடியில் இருக்கிறது.
இது செயலற்ற நிலையில் இருப்பதாக கூறப்பட்டு வந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இதனால், கடலில் 5 கிமீ சுற்றளவுக்கு சாம்பல் வெளியானது. இதன் சாம்பல் வானத்தில் 20 கிமீ உயரத்துக்கு பிரமாண்டமாக பறந்ததாக செயற்கைக்கோள் புகைப்படங்கள் மூலமாக தெரிய வந்துள்ளது. எரிமலை வெடித்ததால், கடலில் சுனாமி அலைகள் ஏற்பட்டன. அவை கரைகளை தாண்டி டொங்கா நகரத்துக்குள் நுழையும் வீடியோக்கள், சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
பெரியளவில் சுனாமி அலைகள் ஏற்படும் அபாயம் இருப்பதாக டொங்கா மட்டுமின்றி, நியூசிலாந்துக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால், இப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் பீதி அடைந்துள்ளனர். தீவுகளில் வசிக்கும் மக்கள், பாதுகாப்பான இடத்துக்கு செல்லும்படி எச்சரிக்கப்பட்டு உள்ளனர்.
மேலும் செய்திகள்
அரசியல் எனக்கு ஒத்துவராது அக்ஷய் குமார் கருத்து
2 ஆண்டுகளுக்குப் பிறகு சர்வதேச விமான சேவை மீண்டும் துவங்கும் சீனா: இந்தியாவுக்கு அனுமதியில்லை
ரஷ்யாவின் எதிர்ப்பை மீறி பின்லாந்து, ஸ்வீடனுக்கு நேட்டோவில் அனுமதி: 30 நாடுகள் ஒப்புதல் கையெழுத்து
இலங்கை நாடாளுமன்றத்தில் இருந்து அதிபர் கோத்தபய விரட்டியடிப்பு: எதிர்க்கட்சிகளின் கோஷத்தால் ஓட்டம்
இலங்கை நாடாளுமன்றத்தில் ‘கோ ஹோம் கோத்த’ கோஷத்தால் அதிபர் ஓட்டம்: எதிர்கட்சிகளின் அமளியால் பரபரப்பு
2 நாளில் 24 நிலநடுக்கங்கள்: இன்றும் அந்தமானில் உணரப்பட்டது
தொடர் கனமழை : சிட்னி நகரத்தை சூழ்ந்த வெள்ளம்.. 50 ஆயிரம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற அறிவுறுத்தல்..
மெக்சிகோவில் விநோதம்.! பெண் முதலையை முத்தம் கொடுத்து மணந்த மேயர்!!
தோண்ட தோண்ட சடலங்கள்.. மணிப்பூரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்வு!!
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!
கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!