வருமானவரித்துறையினர்போல் நடித்து லாரி உரிமையாளர் வீட்டில் ₹20 லட்சம் கொள்ளை
2022-01-16@ 02:23:41

கிணத்துக்கடவு : கோவை மாவட்டம் கிணத்துக்கடவு வடபுதூர் கோவை-பொள்ளாச்சி மெயின் ரோட்டில் பரோடா பேங்க் அருகே வசிப்பவர் பஞ்சலிங்கம் (53). லாரி உரிமையாளர். இவர் நேற்று மதியம் வீட்டில் இருந்தார். அப்போது காரில் 5 பேர் வந்தனர். டிப்டாப் உடையணிந்திருந்த அவர்கள், ‘‘நாங்கள் வருமான வரித்துறையிலிருந்து வருகிறோம். உங்கள் வீட்டை சோதனை செய்ய வேண்டும்’’ என கூறினர். செல்போன்களை வாங்கி வைத்துக்கொண்டு வீட்டை தாழிட்டுவிட்டு சோதனை செய்வதுபோல் நடித்துள்ளனர்.
பீரோவில் வைத்திருந்த ₹20 லட்சம் ரொக்கம், பரோடா வங்கி கணக்கு புத்தகம், செக் புக் ஆகியவற்றை எடுத்துக்கொண்டதுடன், சிசிடிவி கேமரா காட்சிகள் பதிவான ஹார்ட் டிஸ்க்கையும் எடுத்துச்சென்றனர். சந்தேகம் அடைந்த பஞ்சலிங்கம் அவர்கள் பற்றி விசாரித்தார்.
அப்போது அவர்கள் வருமான வரித்துறையினர்போல நடித்த கொள்ளையர்கள் என்பது தெரியவந்தது. இதையடுத்து இது பற்றி கிணத்துக்கடவு காவல் நிலையத்திற்கு அவர் தகவல் தெரிவித்தார். அங்கு வந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வீட்டை ஆய்வு செய்தார். கொள்ளையர்களை பிடிக்க மாவட்ட எஸ்பி செல்வ நாகரத்தினம் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
மாணவியை கர்ப்பமாக்கிய மாணவன் கைது
தஞ்சை அருகே பழங்கால உலோக சிலைகள் பறிமுதல்: 2 பேர் கைது..!!
மயிலாடுதுறை அருகே மதுபோதையில் தகராறு செய்த கணவன்...தட்டிக்கேட்ட மகனை பீர்பாட்டிலால் குத்தியதால் மனைவி ஆத்திரம்!!
அம்பத்தூர் பேருந்து நிலையத்தில் ஏட்டுவை தாக்கிய போதை ஆசாமிகள்; 3 பேர் கைது
மேலூர் அருகே பயங்கரம், காதலித்து திருமணம் செய்த இளம்பெண் எரித்து கொலை: 3-வது திருமணம் செய்த கணவர், பெற்றோருடன் கைது
ஐபிஎஸ் அதிகாரி என கூறி ரூ. 6 லட்சம் மோசடி: சென்னை தொழிலதிபரை ஏமாற்றிய 2 பேருக்கு வலை
தொடர் கனமழை : சிட்னி நகரத்தை சூழ்ந்த வெள்ளம்.. 50 ஆயிரம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற அறிவுறுத்தல்..
மெக்சிகோவில் விநோதம்.! பெண் முதலையை முத்தம் கொடுத்து மணந்த மேயர்!!
தோண்ட தோண்ட சடலங்கள்.. மணிப்பூரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்வு!!
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!
கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!