வாகன சோதனையில் ஈடுபட்டபோது ரோந்து வாகனம் மீது பஸ் மோதி விபத்து
2022-01-16@ 01:02:45

*2 போலீசார் காயம்
அண்ணாநகர் : நெற்குன்றம் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் நேற்று காலை கோயம்பேடு போக்குவரத்து போலீசார், வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, கோயம்பேட்டில் இருந்து அவ்வழியே வேலூர் நோக்கி சென்ற அரசு பஸ், திடீரென கட்டுப்பாட்டை இழந்து, அங்கிருந்த ரோந்து வாகனம் மீது மோதியது. இதில், ரோந்து வாகனத்தின் முன்பகுதி முழுவதும் நொறுங்கியது.
மேலும், அருகில் பணியில் இருந்த போக்குவரத்து எஸ்.ஐ ஆனந்தன் (56), போக்குவரத்து காவலர் தண்டபாணி (38) ஆகிய இருவரும் காயமடைந்தனர். சக போலீசார் அவர்களை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு இருவரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து கோயம்பேடு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து, விபத்து ஏற்படுத்திய அரசு பஸ் டிரைவர், வேலூர், காட்பாடியை சேர்ந்த ஜெயக்குமார் (51), என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
மேலும் செய்திகள்
நடைபாதை, சைக்கிள் பாதை, வாகன நிறுத்துமிடம் வசதிகளுடன் சென்னையில் ஸ்மார்ட் சாலைகள்
மின் இணைப்பு துண்டிப்பு என வரும் போலியான செய்திகளை நம்பி ஏமாற வேண்டாம்: போலீஸ் கமிஷனர் எச்சரிக்கை
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொள்ள 15 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்: சென்னை மாநகராட்சி உத்தரவு
சென்னை விமான நிலையத்தில் குண்டும் குழியுமான கார் பார்க்கிங்: பயணிகள் அவதி
கோயம்பேடு மார்க்கெட் வளாகத்தில் பராமரிப்பில்லாத கட்டண கழிப்பறைகள்: வியாபாரிகள் தவிப்பு
புறநகர் பகுதியில் கஞ்சா விற்ற நைஜீரிய வாலிபர்களுக்கு 7 ஆண்டு சிறை தண்டனை: சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!
கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!
நுபுர் சர்மாவை ஆதரித்த டெய்லர் தலை துண்டித்து கொடூர கொலை ராஜஸ்தானில் வன்முறை, போராட்டம்!!
ஆச்சர்யமூட்டும் கலைநயம்!: அமெரிக்கா சியாட்டெலில் அமைந்துள்ள கண்ணாடி பூங்காவின் வியக்க வைக்கும் புகைப்படங்கள்..!!
அமெரிக்காவில் ரயில் தடம் புரண்டு 3 பேர் பரிதாப சாவு; 50 பேர் காயம்