SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

டெஸ்ட் கேப்டன் பதவியிலிருந்து விராட் கோலி தீடீர் விலகல் : ரவி சாஸ்திரி, தோனிக்கு நன்றி

2022-01-15@ 19:56:55

* எல்லாமும் ஒரு நாள் முடிவுக்கு வரும் என்பதை போலவே அணித் தலைவர் பதவியும் முடிவுக்கு வந்துள்ளது


டெஸ்ட் கிரிக்கெட் கேப்டன் பதவியில் பதிவியில் இருந்து விலகுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார்.  
தென்னாப்பிரிக்கா  அணிக்கு எதிரியான தொடரை 2-1 என்ற கணக்கில் இந்திய அணி தோல்வியடைந்த நிலையில் விராட் கோலி இந்த முடிவை எடுத்திருப்பது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

டெல்லியைச் சேர்ந்த 33 வயதாகும் விராட் கோலி நிகழ்கால கிரிக்கெட் வீரர்களில் ஆகச்சிறந்த வீரர்களுள் முக்கியமானவராக திகழ்ந்து வருகிறார். கடந்த ஆண்டு செப்டம்பரில் டி20 கேப்டன் பொறுப்பிலிருந்து விலகுவதாக விராட் கோலி அறிவித்தது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் கடந்த டிசம்பரில் ஒரு நாள் அணி கேப்டனிலிருந்து கோலி விடுவிக்கப்பட்டு அவருக்கு பதிலாக புதிய கேப்டனாக ரோகித் சர்மா அறிவிக்கப்பட்டார். விராட் கோலி டெஸ்ட் அணிக்கு மட்டும் கேப்டனாக நீடித்தார்.

கேப்டன் பொறுப்பிலிருந்து விலகியது குறித்து விராட் கோலி ட்விட்டரில் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது, “7 ஆண்டுகள் கடின உழைப்பு, முயற்சியின் மூலம் இந்திய அணியை சரியான பாதையில் கொண்டு செல்லப்பட்டது. என்னுடைய பணியை நேர்மையாக செய்திருக்கிறேன்.எல்லாமும் ஒரு நாள் முடிவுக்கு வரும் என்பதை போலவே அணித் தலைவர் பதவியும் முடிவுக்கு வந்துள்ளது.

எனது கேரியரில் பல ஏற்ற, இறக்கங்களை சந்தித்திருக்கிறேன். ஆனால் என்றுமே அவநம்பிக்கை கொண்டிருக்கவில்லை. என்னால் எப்போதும் 120 சதவிகித உழைப்பைக் கொடுக்க முடியும் என்று நம்பியிருக்கிறேன். அதைக் கொடுக்க முடியாதபோது அதைச் செய்வது சரியல்ல என்று தெரியும் இருந்தாலும் என்னால் என்னை ஏமாற்றி கொண்டு செயல்பட முடியாது.

நாட்டுக்காக வழிநடத்தும் பதவியை அளித்ததற்காகவும், நீண்ட காலம் அந்த பணியில் இருக்க வாய்ப்பு அளித்ததற்காகவும் இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். எனது அணி வீரர்களுக்கு பெரிய நன்றி. உங்களால் இந்த பயணம் மிகவும் அழகானதாகவும், நினைவுகளோடும் கடந்தது.

எனக்கு உறுதுணையாக இருந்த ரவி சாஸ்திரி பெரிய நன்றி. இறுதியாக எம்.எஸ்.தோனி அவர்களுக்கு ஒரு பெரிய நன்றியை தெரிவிக்கிறேன். எனக்குள் இருக்கும் கேப்டனுக்கான தகுதியை கண்டறிந்து, நம்பி எனக்கு உறுதுணையாக இருந்து முன்னேற்றியவர்.இவ்வாறு கோலி தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • porkappal1

  முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்

 • france_elizabeth

  30 ஆண்டுகளுக்கு பிறகு பிரான்சில் பெண் பிரதமர் பதவியேற்பு..!!

 • assam-rain-17

  அசாமில் அடித்து நொறுக்கிய கனமழை!: வெள்ளத்தில் மூழ்கிய ரயில் நிலையம்...2 லட்சம் பேர் பாதிப்பு..!!

 • ramnjamaiii

  ஜமைக்காவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்: அம்பேதகர் சதுக்கத்தை திறந்து வைத்து மரக்கன்றை நட்டார்!!

 • pudha_purnima

  உலகம் முழுவதும் புத்த பூர்ணிமா கோலாகல கொண்டாட்டம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்