தினமும் அதிகாரிகளுடன் ஆலோசனை வீட்டில் இருந்தே அரசு பணியை கவனிக்கும் பசவராஜ் பொம்மை
2022-01-15@ 13:25:50

பெங்களூரு: கர்நாடக மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை தொற்று பரவலை தடுக்கும் வகையில் மருத்துவ நிபுணர்கள், மாநில அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தி வந்தார். இந்நிலையில் கடந்த 10ம் தேதி, அவரின் உடல் நிலை பாதிக்கப்பட்டது. மருத்துவ பரிசோதனை செய்யப்பட்ட போது முதல்வர் பசவராஜ் பொம்மைக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானது. இதனால், வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டார். அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த அமைச்சர்கள், அதிகாரிகளும் பரிசோதனை செய்து தனிமைப்படுத்தி கொண்டுள்ளனர். இதற்கிடையே முதல்வர் பசவராஜ் பொம்மை மணிப்பால் மருத்துவமனைக்கு சென்று உடல் பரிசோதனை மேற்கொண்ட பிறகு வீடு திரும்பி உள்ளார். முதல்வர் பசவராஜ் பொம்மையின் மகன், மகளுக்கு வைரஸ் தொற்று பாதிப்பு உறுதியான நிலையில் அவர்களும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
முதல்வர் பசராஜ் பொம்மை தனக்கு வைரஸ் தொற்று பாதிப்பு இருப்பதை அனைவருக்கும் தெரிவித்து அனைவரும் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும்என்று கேட்டுக்கொண்டார். அத்துடன் வீட்டில் இருந்தபடி சுகாதார துறை அதிகாரிகள், மருத்துவ நிபுணர்கள் உள்ளிட்டோருடன் தினந்தோறும் ஆலோசனை நடத்தி வருகிறார். மாவட்ட கலெக்டர்களுடன் தினந்தோறும் ஆலோசனை நடத்தி மாவட்டத்தில் வைரஸ் தொற்று பாதிப்பு எவ்வளவு இருக்கிறது? அதை தடுப்பதற்கு எடுக்கப்படும் நடவடிக்கைகள் மற்றும் தடுப்பூசி வழங்கும் பணி உள்ளிட்ட விபரங்களை கேட்டு அறிந்து ஆலோசனையும் அளித்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று முதல்வர் பசவராஜ் பொம்மை காணொளி காட்சியின் மூலமாக மைசுகர் சர்க்கரை ஆலை புனரமைப்பு தொடர்பாக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். மைசுகர் சர்க்கரை ஆலை புனரமைப்பு செய்யப்பட்டு விரைவில் அது செயல்படும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வர் பசவராஜ் பொம்மை அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார். கொரோனா வைரஸ் தொற்று பாதிப்புடன் வீட்டில் தனிமையில் இருந்தாலும் முதல்வர் பசவராஜ் பொம்மை நிர்வாகம் சீர்குலையக்கூடாது என்பதற்காக தினந்தோறும் 10 மணி நேரம் பல்வேறு பணிகளை மேற்கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகள்
ஷீனா போரா கொலை வழக்கில் இந்திராணி முகர்ஜிக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன்
பீகார் முதல்வரிடம் 6ம் வகுப்பு மாணவன் புகார் அரசு பள்ளியில் தரமில்லை... படிக்க உதவி பண்ணுங்க...: சமூக வலைதளங்களில் வீடியோ வைரல்
ஒன்றிய அமைச்சரவை அனுமதி பொதுத்துறை நிர்வாக குழுக்களுக்கு பங்குகள் விற்க கூடுதல் அதிகாரம்: துணை நிறுவனங்களை மூடவும் முடிவெடுக்கலாம்
இலங்கை போலதான் இந்தியாவும் உள்ளது மக்களை திசை திருப்புவதன் மூலம் உண்மை நிலையை மாற்றமுடியாது: ஒன்றிய அரசு மீது ராகுல் பாய்ச்சல்
பேரறிவாளன் விடுதலை காங்கிரஸ் கண்டனம்
நூல் விலையை கட்டுப்படுத்தக் கோரி ஒன்றிய அமைச்சர்களிடம் திமுக எம்பி.க்கள் மனு
முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்
30 ஆண்டுகளுக்கு பிறகு பிரான்சில் பெண் பிரதமர் பதவியேற்பு..!!
அசாமில் அடித்து நொறுக்கிய கனமழை!: வெள்ளத்தில் மூழ்கிய ரயில் நிலையம்...2 லட்சம் பேர் பாதிப்பு..!!
ஜமைக்காவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்: அம்பேதகர் சதுக்கத்தை திறந்து வைத்து மரக்கன்றை நட்டார்!!
உலகம் முழுவதும் புத்த பூர்ணிமா கோலாகல கொண்டாட்டம்..!!