'அமைதியை விரும்புவதால் இந்தியா குறித்து தப்புக்கணக்கு வேண்டாம்': ராணுவ தினத்தில் தளபதி எம்எம் நரவானே பேச்சு
2022-01-15@ 12:50:20

டெல்லி: இந்தியா அமைதியை விரும்பும் நாடு என தெரிவித்துள்ள ராணுவ தளபதி எம்எம் ஜெனரல் நரவானே இதை வைத்து யாரும் தப்புக்கணக்கு ஏதும் போட்டுவிட வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளார். ராணுவ தினத்தை ஒட்டி ஜெனரல் மனோஜ் முகுந்த் நரவனே வீரர்கள் மத்தியில் சிறப்புரையாற்றினார். அப்போது பேசிய அவர் அமைதி நிலவ வேண்டுமென்ற இந்தியாவின் விருப்பம் என்பது அதன் வலிமையிலிருந்து பிறந்தது என்றும், எனவே இந்நாடு குறித்து யாரும் தவறாக புரிந்து கொள்ள வேண்டாம் என்றும் விளக்கினார். இந்தியாவின் எல்லையில் மாற்றம் மேற்கொள்ளப்படும் முயற்சிகளை நமது ராணுவம் முறியடிக்கும் என கூறிய ஜெனரல் எம்எம் நரவனே, இந்தியாவுக்குள் ஊடுருவ 300 முதல் 400 பயங்கரவாதிகள் எல்லையில் காத்திருக்கின்றனர் என்றும், இந்திய எல்லையின் நிலைமை கடந்த ஆண்டை விட சிறப்பாக இருந்தாலும் பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் தொடர்ந்து புகலிடம் கொடுத்து வருகிறது என்றும் தெரிவித்தார்.
மேலும், என்கவுன்ட்டரில் 144 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டு சீனாவால் பதற்றம் நிலவிய நிலையில் 14ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது என ராணுவ தளபதி குறிப்பிட்டார். இந்திய ராணுவம் சமகால சவால்களை மட்டுமல்லாமல் எதிர்கால சவால்களையும் எதிர்கொள்ளும் வண்ணம் தயாராக இருப்பதாகவும், மிகுந்த இடர்பாடுகளுக்கிடையே நமது இந்திய ராணுவத்தின் சிப்பாய்களும், அதிகாரிகளும் பணிபுரிந்து வருவதாகவும் தளபதி நரவனே தெரிவித்தார். லடாக், அருணாச்சலப்பிரதேசம் உள்ளிட்ட எல்லைப்பகுதிகளில் சீனாவுடன் மோதல் போக்கு நீடித்து வரும் நிலையில் ராணுவ தளபதியின் பேச்சு முக்கியத்துவம் பெறுகிறது.
மேலும் செய்திகள்
ஞானவாபி மசூதியில் சிவலிங்கம் கண்டெடுக்கப்பட்ட இடத்தை பாதுகாக்க வேண்டும்: உச்ச நீதிமன்றம் உத்தரவு
பேரறிவாளன் விடுதலை வழக்கில் இன்று தீர்ப்பு: தமிழக அரசு எழுத்துப்பூர்வ வாதம் தாக்கல்
பிரதமர் மோடி பேச்சு அடுத்த 10 ஆண்டில் 6ஜி சேவை
ஒரே பாலின திருமண அங்கீகார விவகாரம் ஒன்றிய அரசின் பதில் மனுவில் ஆட்சேபனைக்குரிய கருத்துக்கள்: டெல்லி நீதிமன்றம் கடும் கண்டனம்
5 உயர் நீதிமன்றங்களுக்கு புதிய தலைமை நீதிபதிகள்: உச்ச நீதிமன்ற கொலிஜியம் பரிந்துரை
நிலக்கரி ஊழலில் தொடர்பு மம்தாவின் மருமகனிடம் விசாரிக்க தடையில்லை: உச்ச நீதிமன்றம் உத்தரவு
30 ஆண்டுகளுக்கு பிறகு பிரான்சில் பெண் பிரதமர் பதவியேற்பு..!!
அசாமில் அடித்து நொறுக்கிய கனமழை!: வெள்ளத்தில் மூழ்கிய ரயில் நிலையம்...2 லட்சம் பேர் பாதிப்பு..!!
ஜமைக்காவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்: அம்பேதகர் சதுக்கத்தை திறந்து வைத்து மரக்கன்றை நட்டார்!!
உலகம் முழுவதும் புத்த பூர்ணிமா கோலாகல கொண்டாட்டம்..!!
நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகே கல்குவாரியில் பாறை சரிந்து விழுந்து விபத்து; மீட்பு பணிகள் தீவிரம்..!!