திவாலை நோக்கிச் செல்லும் இலங்கைக்கு இந்தியா நிதியுதவி; உணவுப் பொருட்களை வாங்க சுமார் ரூ. 6,700 கோடி நிதி
2022-01-15@ 10:03:45

கொழும்பு: அந்நிய செலாவணி கரைந்து போனதால் திவாலை நோக்கி செல்லும் இலங்கைக்கு ரூ. 6,700 கோடி கடனுதவி அளிக்க இந்திய முன்வந்துள்ளது. வேலையிழப்பு, வருவாய் இழப்பு, நாட்டின் பணவீக்கம், உணவு பணவீக்கம்உள்ளிட்ட காரணங்களால் இலங்கை கடும் பொருளாதார நெருக்கடிகளை சந்தித்து வருகிறது. சீனாவிடமும், சர்வதேச வங்கிகளிடமும் கடன் பெற்றுள்ள இலங்கை, நாட்டின் பொருளாதாரம் ஆட்டம் கண்டு வரும் நிலையில் கடனை எப்படி அடைப்பது என்று தெரியாமல் திக்குமுக்காடி போயுள்ளது.
2022 ஆம் ஆண்டுக்குள்ளாக சுமார் 7.3 மில்லியன் அமெரிக்க டாலர் அளவிலான உள்நாட்டு, வெளிநாட்டு கடன்களை இலங்கை அரசு திருப்பி செலுத்தவேண்டியுள்ளது. அதிலும் குறிப்பாக ஜனவரி மாதத்திற்குள்ளாக 500 மில்லியன் டாலர் கடனை திருப்பி செலுத்தவேண்டிய இக்கட்டான சூழ்நிலையில் இலங்கை சிக்கியுள்ளது. உணவு,பெட்ரோல், டீசல் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கு கூட கடும் தட்டுப்பாடு நிலவும் நிலையில் அவற்றை இறக்குமதி செய்ய போதுமான அந்நிய செலாவணி கையிருப்பு இல்லாமல் இலங்கை தவிக்கின்றது.
இதையடுத்து இலங்கையில் நிலவும் உணவு தட்டுப்பாட்டை போக்க இந்தியா உதவிக்கரம் நீட்டியுள்ளது. தற்போதைய சிக்கலிலிருந்து மீண்டு வர ரூ. 6,700 கோடியை அளிக்க இந்தியா முன்வந்துள்ளது. இதன்மூலம் உணவுப் பொருட்களை இறக்குமதி செய்து நாட்டில் நிலவும் உணவு தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று இலங்கை தெரிவித்துள்ளது.
மேலும் செய்திகள்
மக்கள் கோபத்தால் பதுங்கி இருந்த நிலையில் வெளியில் வந்தார் மகிந்த ராஜபக்சே: நாடாளுமன்ற கூட்டத்தில் பங்கேற்றார்
1000 உக்ரைன் வீரர்கள் சரண் ரஷ்யா வசமானது மரியுபோல் நகரம்
பிரதமர் பதவியை ராஜினாமா செய்த பின்னர் முதன்முறையாக நாடாளுமன்றம் வந்தார் மகிந்த ராஜபக்சே
‘கேன்ஸ்’ சர்வதேச திரைப்பட விழா தொடங்கியது பாசிஸ்டுகளை விமர்சிக்க புது சார்லி சாப்ளின் தேவை: நகைச்சுவை நடிகரான உக்ரைன் அதிபர் வேண்டுகோள்
உலகளவில் உணவு பாதுகாப்பின்மை அதிகரிப்பு கோதுமை ஏற்றுமதி தடையை மறுபரிசீலனை செய்யுங்கள்!: இந்தியாவுக்கு அமெரிக்க பிரதிநிதி வேண்டுகோள்
வேண்டுமென்றே விமானத்தை கீழே இறக்கியதால் விபத்து 133 ேபரின் சாவுக்கு விமானியே காரணம்!: கருப்பு பெட்டியில் கிடைத்த தகவலில் பகீர்
முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்
30 ஆண்டுகளுக்கு பிறகு பிரான்சில் பெண் பிரதமர் பதவியேற்பு..!!
அசாமில் அடித்து நொறுக்கிய கனமழை!: வெள்ளத்தில் மூழ்கிய ரயில் நிலையம்...2 லட்சம் பேர் பாதிப்பு..!!
ஜமைக்காவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்: அம்பேதகர் சதுக்கத்தை திறந்து வைத்து மரக்கன்றை நட்டார்!!
உலகம் முழுவதும் புத்த பூர்ணிமா கோலாகல கொண்டாட்டம்..!!