இந்தியாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 2.6 லட்சத்தை நெருங்கியது; தற்போது சிகிச்சையில் 14.17 லட்சம் பேர்: சுகாதாரத்துறை அறிவிப்பு
2022-01-15@ 09:47:06

டெல்லி: இந்தியாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 2.6 லட்சத்தை நெருங்கியது. நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4.85 லட்சத்தை தாண்டியது. அதே போல், பாதிப்பு 3.68 கோடியை தாண்டியது. இன்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:
* புதிதாக 2,68,833 பேர் பாதித்துள்ளனர்.
* இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,63,50,962 ஆக உயர்ந்தது.
* புதிதாக 402 பேர் இறந்துள்ளனர்.
* இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,85,752 ஆக உயர்ந்தது.
* தொற்றில் இருந்து ஒரே நாளில் 1,22,684 பேர் குணமடைந்துள்ளனர்.
* இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 3,49,47,390 ஆக உயர்ந்துள்ளது.
* இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 14,17,820 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
* குணமடைந்தோர் விகிதம் 95.20% ஆக குறைந்துள்ளது. உயிரிழந்தோர் விகிதம் 1.33% ஆக குறைந்துள்ளது.
* சிகிச்சை பெறுவோர் விகிதம் 3.48% ஆக உயர்ந்துள்ளது.
* இந்தியாவில் 1,56,02,51,117 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 58,02,976 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
ஷீனா போரா கொலை வழக்கில் இந்திராணி முகர்ஜிக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன்
பீகார் முதல்வரிடம் 6ம் வகுப்பு மாணவன் புகார் அரசு பள்ளியில் தரமில்லை... படிக்க உதவி பண்ணுங்க...: சமூக வலைதளங்களில் வீடியோ வைரல்
ஒன்றிய அமைச்சரவை அனுமதி பொதுத்துறை நிர்வாக குழுக்களுக்கு பங்குகள் விற்க கூடுதல் அதிகாரம்: துணை நிறுவனங்களை மூடவும் முடிவெடுக்கலாம்
இலங்கை போலதான் இந்தியாவும் உள்ளது மக்களை திசை திருப்புவதன் மூலம் உண்மை நிலையை மாற்றமுடியாது: ஒன்றிய அரசு மீது ராகுல் பாய்ச்சல்
பேரறிவாளன் விடுதலை காங்கிரஸ் கண்டனம்
நூல் விலையை கட்டுப்படுத்தக் கோரி ஒன்றிய அமைச்சர்களிடம் திமுக எம்பி.க்கள் மனு
முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்
30 ஆண்டுகளுக்கு பிறகு பிரான்சில் பெண் பிரதமர் பதவியேற்பு..!!
அசாமில் அடித்து நொறுக்கிய கனமழை!: வெள்ளத்தில் மூழ்கிய ரயில் நிலையம்...2 லட்சம் பேர் பாதிப்பு..!!
ஜமைக்காவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்: அம்பேதகர் சதுக்கத்தை திறந்து வைத்து மரக்கன்றை நட்டார்!!
உலகம் முழுவதும் புத்த பூர்ணிமா கோலாகல கொண்டாட்டம்..!!