SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

முழு ஊரடங்கு அமல்படுத்தும் எண்ணம் அரசிடம் கிடையாது: அமைச்சர் சுதாகர் தகவல்

2022-01-15@ 08:55:03

பெங்களூரு: முழு ஊரடங்கு அமல்படுத்தும் எண்ணம் அரசிடம் கிடையாது என்று சுகாதார துறை அமைச்சர் சுதாகர் தெரிவித்தார். பெங்களூருவில் உள்ள பிஎம்சிஆர்ஐ மருத்துவமனையில் மாநில கவர்னர் தாவர்சந்த் கெலாட் நேற்று பூஸ்டர் தடுப்பூசி போட்டுக்கொண்டார். இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற மாநில சுகாதார துறை அமைச்சர் சுதாகர் நிருபர்களிடம் கூறியதாவது: கர்நாடக மாநிலத்தில் பூஸ்டர் தடுப்பூசி வழங்கும் பணி விரைவாக நடந்து வருகிறது. இதுவரை 83,937 பேர்கள் பூஸ்டர் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். இதில் 1,179 பேர் கர்ப்பிணிகள். கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்க வேண்டும் என்பதற்காக மாநில அரசின் சார்பில் கடின விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.

முக கவசம் அணிவது, அடிக்கடி கைகளை கிருமிநாசினி உதவியால் சுத்தம் செய்ய வேண்டும். தேவையின்றி மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரக்கூடாது. கொரோனா வைரஸ் உலக நாடுகளில் பரவியுள்ளது. நமது இந்தியாவிலும் வைரஸ் தொற்று பாதிப்பு அதிகமாக உள்ளது. கர்நாடக மாநிலத்திலும் பாதிப்பு அதிகரித்து வருவதால் தடுப்பூசி போடும் பணி போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து வருகிறாம். முதல்வர் , பிரதமர் உள்ளிட்டோர் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர்.  பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ளவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். எனவே, மக்கள் தவறாமல் தடுப்பூசி போட்டுக்கொள்ளவேண்டும். கொரோனா வைரஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டால் மட்டுமே கொரோனா வைரசை வெற்றி கொள்ள முடியும்.

கொரோனா வைரஸ் தொற்று பரவல் மாநிலத்தில் அதிகரித்து வந்தாலும் தற்போது அமலில் இருக்கிற கடின விதிகள் தவிர முழு ஊரடங்கு அமல்படுத்தும் எண்ணம் அரசிடம் கிடையாது. வைரஸ் தொற்று பாதிப்பு அதிகரித்தாலும் 5-6 சதவீதம் பேர் மட்டுமே மருத்துவ மனையில் அனுமதிக்கப்படுகின்றனர். எனவே, மாநிலத்தில் மூன்றாவது அலை பரவுகிறது என்ற பேச்சுக்கே இடமில்லை. எனவே மக்கள் அச்சம் கொள்ள தேவை கிடையாது. இதற்கு முன்பு கொரோனா இரண்டாவது அலை பரவல் அதிகரித்த போது கொரோனா பரவல் செயினை தடுப்பதற்கு 14 நாள் தேவைப்பட்டது. எனவே, வார இறுதி ஊரடங்கு சில வாரம் நீட்டிப்பு செய்யப்படலாம். முதல்வர் பசவராஜ் பொம்மை மற்றும் மருத்துவ நிபுணர்கள் ஆலோசனை நடத்தி அறிவிப்பார்கள்.  இவ்வாறு அமைச்சர் டாக்டர் கே சுதாகர் கூறினார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • porkappal1

    முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்

  • france_elizabeth

    30 ஆண்டுகளுக்கு பிறகு பிரான்சில் பெண் பிரதமர் பதவியேற்பு..!!

  • assam-rain-17

    அசாமில் அடித்து நொறுக்கிய கனமழை!: வெள்ளத்தில் மூழ்கிய ரயில் நிலையம்...2 லட்சம் பேர் பாதிப்பு..!!

  • ramnjamaiii

    ஜமைக்காவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்: அம்பேதகர் சதுக்கத்தை திறந்து வைத்து மரக்கன்றை நட்டார்!!

  • pudha_purnima

    உலகம் முழுவதும் புத்த பூர்ணிமா கோலாகல கொண்டாட்டம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்