வடகொரியாவில் ஒரே வாரத்தில் 2- வது முறையாக ஏவுகணை சோதனை: அதிபர் கிம் ஜாங் உன்- இன் இச்செயலுக்கு உலகம் முழுவதும் பல நாடுகள் கண்டனம்
2022-01-12@ 16:13:45

பியோங்யாங்: வடகொரியா ஒரே வாரத்தில் 2- வது முறையாக ஏவுகணை சோதனையை நிகழ்த்தி உலக நாடுகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புத்தாண்டு தினத்தன்று நாட்டு மக்களுக்கு உரையாற்றிய வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் இன்றைய பொருளாதார சூழலில் பொதுமக்களுக்கு 'உணவு தான் முக்கியமே தவிர; அணு ஆயுதங்கள் அல்ல' என்று கூறினார். ஆனால் அதற்கு நேர்மாறாக ஒரே வாரத்தில் 2 ஏவுகணை சோதனைகளை வடகொரியா நிகழ்த்தியது. 700 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இலக்கை இந்த ஏவுகணை துல்லியமாக தாக்கி அளித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் வடகொரியாவின் வெற்றிகரமான ஹைபர் சோனிக் ஏவுகணை சோதனையில் அந்நாட்டு தலைவர் கிம் ஜாங் உன் கலந்துகொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது. ஹைபர் சோனிக் எனும் ஒளியை விட 5 மடங்கு வேகமாக பாய்ந்து துல்லியமாக இலக்கை தாக்கும் இந்த ஏவுகணை உலகம் முழுவதும் பல நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தன. வெற்றிகரமாக நடத்தப்பட்ட இந்த சோதனையில் கிம் ஜாங் உன் கலந்து கொண்ட நிலையில் கடந்த 2 ஆண்டுகளில் முதன்முறையாக ஏவுகணை சோதனையின் பொழுது அதிகாரபூர்வமாக அவர் கலந்துகொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகள்
மக்கள் கோபத்தால் பதுங்கி இருந்த நிலையில் வெளியில் வந்தார் மகிந்த ராஜபக்சே: நாடாளுமன்ற கூட்டத்தில் பங்கேற்றார்
1000 உக்ரைன் வீரர்கள் சரண் ரஷ்யா வசமானது மரியுபோல் நகரம்
பிரதமர் பதவியை ராஜினாமா செய்த பின்னர் முதன்முறையாக நாடாளுமன்றம் வந்தார் மகிந்த ராஜபக்சே
‘கேன்ஸ்’ சர்வதேச திரைப்பட விழா தொடங்கியது பாசிஸ்டுகளை விமர்சிக்க புது சார்லி சாப்ளின் தேவை: நகைச்சுவை நடிகரான உக்ரைன் அதிபர் வேண்டுகோள்
உலகளவில் உணவு பாதுகாப்பின்மை அதிகரிப்பு கோதுமை ஏற்றுமதி தடையை மறுபரிசீலனை செய்யுங்கள்!: இந்தியாவுக்கு அமெரிக்க பிரதிநிதி வேண்டுகோள்
வேண்டுமென்றே விமானத்தை கீழே இறக்கியதால் விபத்து 133 ேபரின் சாவுக்கு விமானியே காரணம்!: கருப்பு பெட்டியில் கிடைத்த தகவலில் பகீர்
முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்
30 ஆண்டுகளுக்கு பிறகு பிரான்சில் பெண் பிரதமர் பதவியேற்பு..!!
அசாமில் அடித்து நொறுக்கிய கனமழை!: வெள்ளத்தில் மூழ்கிய ரயில் நிலையம்...2 லட்சம் பேர் பாதிப்பு..!!
ஜமைக்காவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்: அம்பேதகர் சதுக்கத்தை திறந்து வைத்து மரக்கன்றை நட்டார்!!
உலகம் முழுவதும் புத்த பூர்ணிமா கோலாகல கொண்டாட்டம்..!!