குடியிருப்புகளை அகற்ற எதிர்ப்பு: பொதுமக்கள் 2வது நாளாக போராட்டம்
2022-01-12@ 00:54:05

துரைப்பாக்கம்: ஈஞ்சம்பாக்கம் பெத்தேல் நகரில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்குள்ள வீடுகள் நீர்நிலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளதாகவும், அதை அகற்றும்படியும் வருவாய்த் துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, அதிகாரிகள் இங்குள்ள வீடுகளுக்கு நோட்டீஸ் வழங்கினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், நேற்று முன்தினம் இங்கு மீண்டும் வருவாய்த்துறை சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த குடியிருப்புவாசிகள், போராட்டத்தில் ஈடுபட்டனர். 2வது நாளாக நேற்றும் போராட்டம் தொடர்ந்தது.
இதில், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர், பாட்டாளி மக்கள் கட்சியினர் பங்கேற்றனர். இதில் பங்கேற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் ஜி.ராம கிருஷ்ணன் கூறுகையில், பெத்தேல் நகர் குடியிப்புவாசிகள் தரப்பில் வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. இந்த வழக்கில் தமிழ்நாடு நில நிர்வாக ஆணையர், சென்னை மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டவர்களை வரும் 20ம் தேதி ஆஜராகும்படி நீதிமன்றம் உத்திரவிட்டுள்ளது. இந்தநிலையில் வருவாய்த் துறையினர், 3 நாட்களுக்குள் வீடுகளை காலி செய்ய வேண்டும் என குடியிருப்புவாசிகளுக்கு நோட்டீஸ் வழங்கி உள்ளனர். இது சட்டவிரோதமானது, என்றார். அதிகாரிகள் பேச்சுவார்த்தையை ஏற்று இரவு 7 மணிக்கு போராட்டம் கைவிடப் பட்டது.
மேலும் செய்திகள்
மத்திய நிலத்தடி நீர் ஆணைய உத்தரவு தமிழகத்திற்கு பொருந்தாது : தமிழக பாஜக துணைத்தலைவர் விளக்கம்
கிரைண்டர், பம்ப்செட் மீதான வரி உயர்வு வேளாண், தொழில் வளர்ச்சியை பாதிக்கும்! : ராமதாஸ்
பிளாஸ்டிக்கை ஒழிக்க முதலமைச்சர் எடுத்துள்ள மிகப்பெரிய முயற்சி தான் மீண்டும் மஞ்சப்பை திட்டம்; அமைச்சர் மா.சுப்ரமணியன் பேச்சு
தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் தொடர்பாக திருந்திய வழிகாட்டுதல் செயல்முறைகளை வெளியிட்டது பள்ளிக்கல்வித்துறை.!
நடைபாதை, சைக்கிள் பாதை, வாகன நிறுத்துமிடம் வசதிகளுடன் சென்னையில் ஸ்மார்ட் சாலைகள்
மின் இணைப்பு துண்டிப்பு என வரும் போலியான செய்திகளை நம்பி ஏமாற வேண்டாம்: போலீஸ் கமிஷனர் எச்சரிக்கை
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!
கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!
நுபுர் சர்மாவை ஆதரித்த டெய்லர் தலை துண்டித்து கொடூர கொலை ராஜஸ்தானில் வன்முறை, போராட்டம்!!
ஆச்சர்யமூட்டும் கலைநயம்!: அமெரிக்கா சியாட்டெலில் அமைந்துள்ள கண்ணாடி பூங்காவின் வியக்க வைக்கும் புகைப்படங்கள்..!!
அமெரிக்காவில் ரயில் தடம் புரண்டு 3 பேர் பரிதாப சாவு; 50 பேர் காயம்