அமெரிக்காவில் முதல் முறையாக மனிதனுக்கு பன்றி இதயம் பொருத்தி மருத்துவ உலகில் வரலாற்று சாதனை
2022-01-12@ 00:01:33

பால்டிமோர்: அமெரிக்காவில் முதல் முறையாக மனிதனுக்கு பன்றி இதயம் பொருத்தி, மருத்துவ உலகில் வரலாற்று சாதனை படைக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் மேரிலாண்டில் வசிப்பவர் டேவிட் பென்னட் (57). இதய நோயாளியான இவரது உயிரை காப்பாற்ற மாற்று இதயம் பொருத்த வேண்டியது அவசியமாக இருந்தது. ஆனால், பல்வேறு உடல் ரீதியான பாதிப்புகளால் மனித இதய மாற்று அறுவை சிகிச்சைக்கு தகுதியற்றவராக பென்னட் இருந்தார். இதனால், இவரின் உயிரை காப்பாற்ற, பன்றியின் இதயத்தை பொருத்த மேரிலாண்ட் மருத்துவ பல்கலைக்கழக டாக்டர்கள் முடிவு செய்தனர். இதற்கு அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாக துறை அனுமதி வழங்கியது.
இதைத் தொடர்ந்து, கடந்த 8ம் தேதி பென்னட்டுக்கு இதய மாற்று அறுவைசிகிச்சை நடந்தது. பன்றியின் மரபணு மாற்றப்பட்ட இதயத்தை டாக்டர்கள் அவருக்கு வெற்றிகரமாக பொருத்தினர். பன்றியின் இதயம் மனித உடலில் செயல்படும் வகையில் அதில் சில மரபணு மாற்றங்கள் செய்யப்பட்டன. பன்றி இதயத்தின் உயிரணுக்களில் உள்ள சர்க்கரையை அகற்றினர். இதுவே, அதிகவேக உறுப்பு நிராகரிப்புக்கு காரணமாகும். மரபணு மாற்றப்பட்ட பன்றி இதயம் பொருத்தப்பட்டதைத் தொடர்ந்து 3 நாட்களாக பென்னட் உடல் நலத்துடன் உள்ளார்.
அவருக்கு இதய நுரையீரல் இயந்திரம் பொருத்தப்பட்ட போதிலும், பென்னட் புதிய இதயத்தின் மூலமாக சுயமாக சுவாசித்துக் கொண்டிருப்பதாக டாக்டர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். இன்னும் சில வாரங்கள் பென்னட், டாக்டர்களின் தீவிர கண்காணிப்பில் இருப்பார். இது மருத்துவ உலகின் வரலாற்று சாதனையாக பார்க்கப்படுகிறது. ‘இதுவே எனது கடைசி முடிவு. இந்த அறுவை சிகிச்சையால் ஒன்று நான் வாழ வேண்டும் இல்லாவிட்டால் சாக வேண்டும். நான் வாழ விரும்புகிறேன். இதில் வெற்றி பெறுவதற்கான சிறு வாய்ப்புள்ள முயற்சி’ என அறுவை கிச்சை முன் சோகமாக பேசிய பென்னட், இப்போது உற்சாகமாக சிரித்த முகத்துடன் இருப்பதாக டாக்டர்கள் கூறி உள்ளனர்.
* விஞ்ஞானிகளுக்கு ஊக்கமளித்துள்ளது
இதற்கு முன், விலங்கின் உறுப்புகள் மனிதனுக்கு பொருத்தும் முயற்சிகள் தோல்வி அடைந்த நிலையில் முதல் முறையாக இதய மாற்று அறுவை சிகிச்சை வெற்றி கண்டுள்ளது. மனித உறுப்புகளை தானமாக பெறுவதில் பெரும் பற்றாக்குறை நிலவும் நிலையில், அதற்கு பதிலாக விலங்குகளின் உறுப்புகளை பயன்படுத்துவதற்கு விஞ்ஞானிகளுக்கு ஊக்கம் அளிப்பதாக இந்த அறுவை சிகிச்சை அமைந்துள்ளது.
Tags:
America for the first time is the pig heart for man a historic achievement in the medical world அமெரிக்கா முதல் முறையாக மனிதனுக்கு பன்றி இதயம் மருத்துவ உலகில் வரலாற்று சாதனைமேலும் செய்திகள்
அந்தமான் தீவுகளில் 7 முறை நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை இல்லை
ஒருநாளுக்கான எரிபொருள் மட்டுமே உள்ளது; இலங்கையில் பள்ளிகள் மூடல்: போக்குவரத்து முழுவதும் முடங்கியது
வாடிகனில் பரபரப்பு போப் ராஜினாமா?
அந்தமான் அருகே அடுத்தடுத்து 7 முறை நிலநடுக்கம்: சுனாமி ஏற்படும் அபாயம் உள்ளதாக நிபுணர்கள் கருத்து
மகாபாரத இதிகாசத்தை இயக்கிய பிரபல நாடக இயக்குனர் மரணம்
எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் போக்குவரத்து முடக்கம் காரணமாக இலங்கையில் மீண்டும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.!
மெக்சிகோவில் விநோதம்.! பெண் முதலையை முத்தம் கொடுத்து மணந்த மேயர்!!
தோண்ட தோண்ட சடலங்கள்.. மணிப்பூரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்வு!!
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!
கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!
நுபுர் சர்மாவை ஆதரித்த டெய்லர் தலை துண்டித்து கொடூர கொலை ராஜஸ்தானில் வன்முறை, போராட்டம்!!