ஏறுமுகத்தில் நகை விலை!: சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.104 உயர்ந்து, ரூ.35,896க்கு விற்பனை..இல்லத்தரசிகள் கலக்கம்..!!
2022-01-11@ 10:39:49

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 104 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் 35,896 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சமீப காலமாகவே தங்கம் விலை உயர்வால் வாடிக்கையாளர்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர். கொரோனா, ஒமிக்ரான் தொற்று போன்ற பிரச்சினைகளுக்கு மத்தியில் இந்த விலை உயர்வு பிரச்சினையும் பொதுமக்களை வாட்டி வதைத்து வந்தது. இந்நிலையில் இன்று தங்கம் விலை அதிரடியாகக் உயர்ந்துள்ளது. அதன்படி சென்னையில், ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.104 உயர்ந்துள்ளது. ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.4,487க்கும், சவரன் ரூ.35,896க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.64.60க்கு விற்கப்படுகிறது. நேற்று சென்னையில் ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு 20 ரூபாய் குறைந்து, சவரனுக்கு 160 ரூபாய் சரிந்தது. 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் 4,472 ரூபாய்க்கும், ஒரு சவரன் 35,776 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. தற்போது பண்டிகை நாட்களின் தங்கத்தின் விலை சற்று உயர்வை கண்டிருப்பது இல்லத்தரசிகளை கவலையடைய செய்துள்ளது. தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை அதிகரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகள்
சண்டிகர்கள் நடைபெற்ற 2 நாள் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நிறைவு: பல்வேறு பொருட்களின் மீதான வரி உயர்வு; மருத்துவ உபகரணங்கள் மீதான வரி குறைப்பு
சூதாட்ட விடுதிகள், குதிரை பந்தயம், ஆன்லைன் விளையாட்டுகளுக்கு 28% வரி விதிக்க இன்றைய ஜிஎஸ்டி கூட்டத்தில் முடிவு
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.256 குறைந்து, சவரன் ரூ.37,864-க்கு விற்பனை
ஜனவரி-மார்ச் காலாண்டில் ரூ.10.25 லட்சம் கோடி மதிப்புக்கு டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை
தங்கம் விலை சவரனுக்கு 80 அதிகரிப்பு
ஒரே நாளில் ராக்கெட் வேகத்தில் எகிறிய தங்க விலை..!!! சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.38,040க்கு விற்பனை!!
ஆச்சர்யமூட்டும் கலைநயம்!: அமெரிக்கா சியாட்டெலில் அமைந்துள்ள கண்ணாடி பூங்காவின் வியக்க வைக்கும் புகைப்படங்கள்..!!
அமெரிக்காவில் ரயில் தடம் புரண்டு 3 பேர் பரிதாப சாவு; 50 பேர் காயம்
அசாம் வெள்ளப்பெருக்கு: 135 பேர் உயிரிழந்த நிலையில் மீட்புப்பணிகள் தீவிரம்
ஊர் சுற்றலாம் வாங்க!: உள்ளம் கொள்ளை கொள்ளும் அழகான இந்திய சுற்றுலா இடங்களின் புகைப்பட தொகுப்பு..!!
உக்ரைனில் 1,000 பேர் இருந்த மாலில் ரஷ்யா ஏவுகணை தாக்குதல்: 16 பேர் பலி... 59 பேர் படுகாயம்;