தங்கம் சவரனுக்கு ரூ.144 குறைந்தது
2022-01-11@ 00:06:17

சென்னை: தங்கம் விலை கடந்த 4 மாதத்திற்கும் மேலாக அதிகரிப்பதும், குறைவதுமாக இருந்து வருகிறது. இந்நிலையில் கடந்த 8ம் தேதி ஒரு கிராம் தங்கம் ரூ.4,492க்கும், சவரன் ரூ.35,936க்கும் விற்கப்பட்டது. நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்கம் மார்க்கெட்டுக்கு விடுமுறை. ஒருநாள் விடுமுறைக்கு பிறகு நேற்று தங்கம் மார்க்கெட் தொடங்கியது. அதில் தங்கம் விலை குறைந்து காணப்பட்டது. அதாவது, கிராமுக்கு ரூ.18 குறைந்து ஒரு கிராம் ரூ.4,474க்கும், சவரனுக்கு ரூ.144 குறைந்து ஒரு சவரன் ரூ.35,792க்கும் விற்கப்பட்டது. வரும் வெள்ளிக்கிழமை பொங்கல் திருநாள் மற்றும் முகூர்த்த தினங்கள் அதிக அளவில் வருகிறது. இந்த நேரத்தில் தங்கம் விலை குறைந்துள்ளது விசேஷ தினங்களில் நகை வாங்க காத்திருப்போருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகள்
இறக்குமதி வரி அதிகரிப்பை தொடர்ந்து தங்கம் சவரனுக்கு ரூ.1,016 உயர்வு
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று அதிரடியாக உயர்வு.: சவரன் ரூ.38,480 -க்கு விற்பனை
ஏறுமுகத்தில் தங்கத்தின் விலை; 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.56 உயர்ந்து ரூ.38,336க்கு விற்பனை
வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் மாற்றமில்லை: வர்த்தக காஸ் சிலிண்டர் விலையில் ரூ187 குறைப்பு
தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ856 உயர்வு
டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 79.11 ஆக வீழ்ச்சி
தொடர் கனமழை : சிட்னி நகரத்தை சூழ்ந்த வெள்ளம்.. 50 ஆயிரம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற அறிவுறுத்தல்..
மெக்சிகோவில் விநோதம்.! பெண் முதலையை முத்தம் கொடுத்து மணந்த மேயர்!!
தோண்ட தோண்ட சடலங்கள்.. மணிப்பூரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்வு!!
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!
கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!