கொரோனா பரவல்: முதல்வரின் தனிப்பிரிவில் பொதுமக்கள் நேரடியாக மனுக்கள் அளிப்பதை தவிர்த்து இணையவழியை பயன்படுத்த அறிவுறுத்தல்
2022-01-10@ 16:43:06

சென்னை: கொரோனா பெருந்தொற்று வழிகாட்டி நெறிமுறைகளைக் கடைபிடிக்கும் வகையில், முதலமைச்சரின் தனிப்பிரிவில் பொதுமக்கள் தினமும் நேரடியாக மனுக்களை அளிப்பதற்காக கூடுவதை தவிர்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. முதலமைச்சரின் தனிப்பிரிவில் தினமும் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் ஏராளமான பொதுமக்கள் மனு அளிக்கின்றனர். அது தவிர முதலமைச்சரின் தனிப்பிரிவு அலுவலரை நேரில் சந்தித்தும் மனுக்களை அளிக்கின்றனர். தற்போது கொரோனா பெருந்தொற்று பரவல் வேகமெடுத்துள்ளதால் அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
கொரோனா பரவல் அதிகரித்துள்ள சூழலிலும் பொதுமக்கள் மனுக்கள் அளிக்க வருவதால் முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளி கடைபிடித்தல் போன்ற வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றுவதில் தொய்வு ஏற்படுகிறது. எனவே பொதுமக்கள் மனுக்களை நேரிடையாக அளிப்பதை தவிர்த்து, தளர்வுகள் அறிவிக்கும் வரை தலைமைச் செயலக வாயிலில் இதற்காக வைக்கப்பட்டுள்ள பெட்டியில் மட்டுமே மனுக்களை சேர்க்க அறிவுறுத்தப்படுகிறது. மிகவும் அத்தியாவசிய சூழ்நிலையில் மட்டுமே முதலமைச்சரின் தனிப்பிரிவு அலுவலரை நேரில் சந்தித்து மனு கொடுக்க அனுமதிக்கப்படும்.
மேலும் முதலமைச்சரின் தனிப்பிரிவில் பொதுமக்களிடமிருந்து தபால் / இணையதளம் / மின்னஞ்சல் மற்றும் முதலமைச்சர் உதவி மையம் ஆகிய வழிமுறைகளிலும் மனுக்கள் பெறப்பட்டு வருகிறது. ஆகையால் கொரோனா பெருந்தொற்று வழிகாட்டி நெறிமுறைகளைக் கடைபிடிக்கும் வகையில், முதலமைச்சரின் தனிப்பிரிவில் பொதுமக்கள் தினமும் நேரடியாக மனுக்களை அளிப்பதற்காக கூடுவதை தவிர்த்து, தபால் /இணையவழி சேவைகளை பயன்படுத்தி மனுக்களை அளித்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
Tags:
முதல்வரின் தனிப்பிரிவுமேலும் செய்திகள்
செங்கல்பட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம்: பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு
சோமங்கலம் ஏரியில் மீன் பிடிக்க சென்ற முதியவர் நீரில் மூழ்கி பரிதாப பலி
கேளம்பாக்கம் டிபார்ட்மெண்ட் ஸ்டோரில் தீ விபத்து ரூ. 20 லட்சம் பொருட்கள் எரிந்து நாசம்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ முகாம்
வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் ரூ.38 லட்சத்தில் துணை வேளாண்மை மைய கட்டிடம்
காஞ்சிபுரம் மாவட்ட இடைத்தேர்தல் மது கடைகள் மூட கலெக்டர் உத்தரவு
ஹாட் டாக் பன் சாப்பிடும் போட்டி : 10 நிமிடங்களில் 63 பன்கள் சாப்பிட்டு ஜோய் செஸ்ட்நட் என்பவர் சாம்பியன்..!
தொடர் கனமழை : சிட்னி நகரத்தை சூழ்ந்த வெள்ளம்.. 50 ஆயிரம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற அறிவுறுத்தல்..
மெக்சிகோவில் விநோதம்.! பெண் முதலையை முத்தம் கொடுத்து மணந்த மேயர்!!
தோண்ட தோண்ட சடலங்கள்.. மணிப்பூரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்வு!!
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!