வெங்காடு ஊராட்சியில் சிறப்பு கால்நடை மருத்துவ முகாம்
2022-01-09@ 00:05:16

ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம் வெங்காடு ஊராட்சியில், சிட்லப்பாக்கம் கோட்டம் கால்நடை பராமரிப்புத்துறை மற்றும் கொளத்தூர் கால்நடை மருந்தகம் சார்பில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நேற்று நடந்தது. ஊராட்சி மன்ற தலைவர் அன்னக்கிளி உலகநாதன் தலைமை வகித்தார். துணை தலைவர் தமிழ்செல்வி ரவிசந்திரன் வரவேற்றார். ஊராட்சி செயலர் தணிகாசலம் முன்னிலை வகித்தார்.
கொளத்தூர் கால்நடை மருந்தகம் உதவி மருத்துவர் பிரேம்ஷீலா, ஆய்வாளர் சுதா, பராமரிப்பு உதவியாளர் தாமோதிரன் ஆகியோர் கலந்து கொண்டு ஆடு, மாடு, கோழி, நாய் உள்பட 100க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு பூச்சி மருந்து, சினை பரிசோதனை, தாது உப்பு கலவை ஆகியவை வழங்கினர். மேலும், சிறந்த கன்று மற்றும் கறவை மாடுகளுக்கு பரிசு வழங்கப்பட்டது. இதில் கொளத்தூர், வெங்காடு, இரும்பேடு, கருணாகரச்சேரி ஆகிய பகுதிகளில் இருந்து ஏராளமான கால்நடைகளை, வரவழைத்து சிகிச்சை அளிக்கப்பட்டது.
மேலும் செய்திகள்
வால்பாறையில் ஊருக்குள் புகுந்து 3 வீடுகளை இடித்து சூறையாடிய காட்டு யானை கூட்டம்
பர்கூர் மலைப்பகுதியில் சட்ட விரோதமாக மறைத்து வைத்திருந்த 2 நாட்டு துப்பாக்கிகள் பறிமுதல்: ஒருவர் கைது
வைகை அணையில் 3 லட்சம் மீன்குஞ்சுகள் 16 லட்சம் மீன்கள் வளர்க்க இலக்கு
வெம்பக்கோட்டை அகழாய்வில் நுண்கற்கால கருவி தயாரிக்கும் மூலப்பொருள் கண்டெடுப்பு
இளையான்குடி பகுதியில் விளைச்சல் இருந்தும் விலையில்லை பருத்தி விவசாயிகள் கவலை
வேடசந்தூர் பகுதியில் தக்காளி விலை வீழ்ச்சி விவசாயிகள் கவலை
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!
கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!
நுபுர் சர்மாவை ஆதரித்த டெய்லர் தலை துண்டித்து கொடூர கொலை ராஜஸ்தானில் வன்முறை, போராட்டம்!!
ஆச்சர்யமூட்டும் கலைநயம்!: அமெரிக்கா சியாட்டெலில் அமைந்துள்ள கண்ணாடி பூங்காவின் வியக்க வைக்கும் புகைப்படங்கள்..!!
அமெரிக்காவில் ரயில் தடம் புரண்டு 3 பேர் பரிதாப சாவு; 50 பேர் காயம்