காவேரிப்பாக்கம் வட்டாரத்தில் நெல் தரிசிற்கு பின் பயறு வகை பயிர்கள் சாகுபடி பிரசார இயக்கம்-கலெக்டர் தொடங்கி வைத்தார்
2022-01-08@ 12:37:40

காவேரிப்பாக்கம் : காவேரிப்பாக்கம் வட்டாரம் பெருவளையம் ஊராட்சிக்கு உட்பட்ட களப்பலாம்பட்டு கிராமத்தில், வேளாண்மை துறை சார்பாக, நெல் தரிசிற்கு பின், பயறுவகை பயிர்கள் சாகுபடி பிரசார இயக்கம் நேற்று நடைபெற்றது. இதனை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கி துவக்கி வைத்து பேசினார்.
அப்போது ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் சம்பா பட்ட நெற் பயிர் சாகுபடிக்கு பின்னர், குறைந்த செலவில் அதிக வருமானம் தரும் உளுந்து, பச்சைப்பயறு, காராமணி, ராகி, மணிலா போன்ற மாற்று பயிர்களை சாகுபடி செய்யலாம். இதன் வாயிலாக மண் வளம் பாதுகாப்பதுடன், குறைந்த அளவில் தண்ணீர் தேவையில், அதிக வருமானம் ஈட்டலாம்.
இதைதொடர்ந்து தக்கோலத்தைச் சேர்ந்த தனியார் வேளாண்மை கல்லூரி மாணவிகள், மிகுந்த ஆர்வத்துடன் கலந்து கொண்டு ஒருங்கிணைந்த பண்ணையம், குறித்த செயல் விளக்கம் மாதிரி அமைத்து இருந்தனர். இதனை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் பார்வையிட்டு, மாணவிகள் தங்களின் இரண்டு மாத களப்பணி பயிற்சியில், விவசாயிகளுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு, அவர்களின் தேவைகளை அறிந்து, விவசாய தொழில் நுட்பங்கள் வழங்கியும், விவசாயிகள் அனுபவங்கள் பகிர்ந்து கொண்டு, படிப்பில் கவனம் செலுத்திடவும் அவர் கேட்டுக்கொண்டார்.
இதில் விவசாயிகள், பொது மக்கள், அரசு அதிகாரிகள், தனியார் வேளாண்மை கல்லூரி மாணவிகள், உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகள்
பைப்லைன் இல்லாததால் மழைநீர் கசிவு அருவிபோல் காட்சியளிக்கும் மெட்ரோ ரயில் மேம்பாலம்: பொதுமக்கள் தவிப்பு
நெல்லை அருகே முன்னீர்பள்ளத்தில் 480 ஆண்டுக்கு முற்பட்ட செப்பேடு கண்டெடுப்பு
திருச்சி பொதுப்பணித்துறை ஆபீசில் விஜிலென்ஸ் ரெய்டு: ரூ.31.26 லட்சம் பறிமுதல்
கோவை- மஞ்சூர் சாலையில் அரசு பஸ், தனியார் வாகனங்களை வழிமறித்த காட்டு யானை கூட்டம்: பயணிகள் பீதி
திருப்பதியில் போலி தரிசன டிக்கெட் சேலம் டூரிஸ்ட் நிறுவனத்தில் ஆந்திர போலீசார் விசாரணை
புதிய தொழில்நுட்பத்தில் பட்டாசு தொழிலை மேம்படுத்த 11 பேர் குழு: ஒன்றிய தொழில் வர்த்தகத்துறை அமைச்சகம் நியமனம்
மெக்சிகோவில் விநோதம்.! பெண் முதலையை முத்தம் கொடுத்து மணந்த மேயர்!!
தோண்ட தோண்ட சடலங்கள்.. மணிப்பூரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்வு!!
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!
கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!
நுபுர் சர்மாவை ஆதரித்த டெய்லர் தலை துண்டித்து கொடூர கொலை ராஜஸ்தானில் வன்முறை, போராட்டம்!!