ஓமிக்ரான் தொற்று லேசான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று அலட்சியமாக இருக்க வேண்டாம் : உலக சுகாதார நிறுவனம்
2022-01-07@ 11:11:33

ஜெனீவா : ஓமிக்ரான் தொற்று லேசான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று அலட்சியமாக இருக்க வேண்டாம் என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. உருமாறிய வைரஸான ஓமிக்ரான் தொற்று உலகளவில் அதிவேகமாக பரவி வருகிறது. இந்த நிலையில், ஜெனீவாவில் செய்தியாளர்களிடம் பேசிய உலக சுகாதார நிறுவனத் தலைவர் டெட்ராஸ் அதானம், டெல்டாவை விட ஓமிக்ரான் பாதிப்பு குறைவு என்றாலும் அதனை அலட்சியமாக கருத வேண்டாம் என்று எச்சரித்துள்ளார்.
மேலும் ஓமிக்ரானால் பாதிக்கப்பட்டவர்கள் உயிரிழந்து இருப்பதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தி உள்ளார்.கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் நிலவும் சமத்துவமென்மையை அதிக உயிரிழப்புக்கு காரணம் என்று டெட்ராஸ் குற்றம் சாட்டியுள்ளார்.தொற்று நோய்களை முடிவுக்கு கொண்டு வர உலக நாடுகள் முன்வரவேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ள அவர், தடுப்பூசி செலுத்துவதை அதிகரிக்க வேண்டும் என்று கூறினார். இருப்பினும் பூஸ்டர் மேல் பூஸ்டர் செலுத்துவது கொரோனாவுக்கு நிரந்தர தீர்வு அல்ல என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Tags:
உலக சுகாதார நிறுவனம்மேலும் செய்திகள்
மெல்ல மெல்ல குறையும் கொரோனா; உலக அளவில் பாதிப்பு எண்ணிக்கை 55.35 கோடியை தாண்டியது.! 63.59 லட்சம் பேர் உயிரிழப்பு
ஈரானின் பந்தர்அப்பாஸ் நகரின் அருகே சக்திவாய்ந்த நிலநடுக்கம்; ரிக்டர் அளவுகோளில் 6.1 ஆக பதிவு.! 3 பேர் உயிரிழப்பு
தஞ்சை மியூசியத்தில் இருந்து காணாமல் போன 300 வருட பழமையான புராதன பைபிள் லண்டலின் கண்டுபிடிப்பு..!!
அமெரிக்க வரலாற்றில் முதல்முறையாக கறுப்பின பெண் கேடான்ஜி பிரவுன் ஜாக்சன் உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவியேற்றுக் கொண்டார்!!
ஜி-7 நாட்டு தலைவர்கள் துணியின்றி இருந்தால் பார்க்கவே சகிக்காது; புடின் பதிலடி
நைஜீரியாவில் பஸ் எரிந்தது 5 பேர் உடல் கருகி பலி
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!
கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!
நுபுர் சர்மாவை ஆதரித்த டெய்லர் தலை துண்டித்து கொடூர கொலை ராஜஸ்தானில் வன்முறை, போராட்டம்!!
ஆச்சர்யமூட்டும் கலைநயம்!: அமெரிக்கா சியாட்டெலில் அமைந்துள்ள கண்ணாடி பூங்காவின் வியக்க வைக்கும் புகைப்படங்கள்..!!
அமெரிக்காவில் ரயில் தடம் புரண்டு 3 பேர் பரிதாப சாவு; 50 பேர் காயம்