நாகை அருகே தனியார் நிதி நிறுவனத்தில் போலி நகைகள் மூலம் ரூ.1.16 கோடி கையாடல்: மேலாளர் உட்பட 4 பேர் மீது வழக்கு
2022-01-07@ 01:46:29

நாகை: நாகை மாவட்டம், வேளாங்கண்ணியில் தனியார் நிதி நிறுவனத்தில் திருக்குவளை மாவூரை சேர்ந்த சத்தியபிரகாஷ் கிளை மேலாளராக உள்ளார். இங்கு நாகை மாவட்டம் வேளாங்கண்ணியை சேர்ந்த ஜஸ்வர்யா, செபாஸ்டியன் நகரை சேர்ந்த ராஜ்குமார், திருப்பூண்டி சங்கீதா ஆகியோர் வாடிக்கையாளர் சேவை நிர்வாகிகளாக பணியாற்றி வருகின்றனர். கடந்த நவம்பர் 24ம் தேதி இங்கு நடந்த தணிக்கையின் போது, பாதுகாப்பு பெட்டக அறையில் இருந்த நகை பாக்கெட்டுகள் மாயமானது தெரிய வந்தது.
புகாரின்படி நாகை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தியதில், கடந்த 2020 ஜூன் 20 முதல் 2021 நவம்பர் வரை கிளை மேலாளர் சத்தியபிரகாஷ் உட்பட 4 பேரும் வாடிக்கையாளர் பெயரில் போலியாக ஆவணங்கள் தயார் செய்தும் 33 போலியான வாடிக்கையாளர்கள் கணக்கு தொடங்கி 1359 கிராம் போலி நகைகளுடன் 39 பாக்கெட்டுகளை வைத்துள்ளது, உறுதிமொழி ஆபரணத்தில் 39.5 கிராம் எடை நகையை 53 கிராமாக உயர்த்தி அடகு வைத்தும் பாதுகாப்பு அறையில் உள்ள பணப்பெட்டியில் இருந்து ரூ.15 லட்சத்து 76 ஆயிரத்து 65 முறைகேடாக பயன்படுத்தியது என ரூ.1 கோடியே 16 லட்சத்து 38 ஆயிரத்து 80 கையாடல் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக நாகை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கிளை மேலாளர் சத்தியபிரகாஷ், சேவை நிர்வாகிகள் ஜஸ்வர்யா, ராஜ்குமார், சங்கீதா ஆகிய 4 பேர் மீது நேற்று வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மேலும் செய்திகள்
ஊராட்சி பொது நிதியில் இருந்து மக்கள் நலப்பணியாளர்களுக்கு கூடுதலாக ரூ.2,500 ஊதியம்: ஊரக வளர்ச்சி இயக்குநரகம் உத்தரவு
வேறொரு பெண்ணுடன் தொடர்பு என மனைவி புகார் போலீஸ் விசாரணையின்போது விஷம் குடித்து கணவன் தற்கொலை: அரக்கோணத்தில் அதிர்ச்சி சம்பவம்
தற்காலிக ஆசிரியர்கள் நியமன தடையை நீக்க கோரி முறையீடு: 8ம் தேதி விசாரணை
இலங்கை தமிழர்கள் 8 பேர் தனுஷ்கோடி வருகை
நெல்லையில் முதல் குறைதீர் கூட்டம் ஊர்காவல் படையில் திருநங்கைகளுக்கு வேலை: கலெக்டர் தகவல்
பைக் புதையும்படி சாலை உதவி பொறியாளர் சஸ்பெண்ட்
தொடர் கனமழை : சிட்னி நகரத்தை சூழ்ந்த வெள்ளம்.. 50 ஆயிரம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற அறிவுறுத்தல்..
மெக்சிகோவில் விநோதம்.! பெண் முதலையை முத்தம் கொடுத்து மணந்த மேயர்!!
தோண்ட தோண்ட சடலங்கள்.. மணிப்பூரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்வு!!
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!
கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!