கலைஞர் பெயரை மூடி மறைத்ததால் அதிமுகவுக்கு மக்கள் தண்டனை கொடுத்துள்ளார்கள்: சட்டப்பேரவையில் முதல்வர் பேச்சு
2022-01-07@ 00:15:17

சென்னை: கடந்த காலம் அதிமுக ஆட்சியில் கலைஞருடைய பெயரை மூடி மறைத்த காரணத்தினால் இப்போது மக்கள் தண்டனை கொடுத்துள்ளார்கள் என முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். சட்டப்பேரவையில் நேற்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது: அம்மா உணவக பணியாளர்களின் எண்ணிக்கை மற்றும் அவர்களின் ஊதியம் குறைக்கப்பட்டுள்ளது. அம்மா உணவகத்திற்கு வழங்கப்பட்ட பொருளின் அளவு குறைக்கப்பட்டுள்ளது.
நகர்ப்புற நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு: அம்மா உணவகம் எந்த இடத்திலும் மூடப்படவில்லை. 2 ஆயிரம் ரூபாய் விற்பனையாகும் இடத்தில் 9 ஆயிரம் சம்பளம் கொடுக்கவேண்டி உள்ளது. அதனால் தான் சுழற்சி முறையில் பணியாளர்கள் வரவழைக்கப்படுகின்றனர். பணியாளர்கள் குறைக்கப்படவில்லை. சம்பளமும் குறைக்கப்படவில்லை.
அவை முன்னவர் துரைமுருகன்: நீங்கள் கலைஞர் பெயரில் உள்ள எத்தனையையோ மூடிவிட்டீர்கள்.
எடப்பாடி பழனிசாமி:அம்மா உணவகங்களை மூடினால் அதன் பலனை அனுபவிப்பீர்கள்.
முதல்வர் மு.க.ஸ்டாலின்:கடந்த காலம் உங்களுடைய ஆட்சியில் அவை முன்னவர் கூறியது போல் கலைஞருடைய பெயரை மூடி மறைத்த காரணத்தினால் இப்போது மக்கள் தண்டனை கொடுத்துள்ளார்கள். அந்த தண்டனையை இப்போது அனுபவித்து வருகிறீர்கள்.
Tags:
Artist name cover-up AIADMK people's sentence legislature CM speech கலைஞர் பெயரை மூடி மறைத்த அதிமுக மக்கள் தண்டனை சட்டப்பேரவை முதல்வர் பேச்சுமேலும் செய்திகள்
அரசியலில் இருந்து ஜாதிக்கு மாறினர்: சேலத்தில் ஓ.பன்னீர்செல்வத்திற்கு எதிராக பரபரப்பு போஸ்டர்
எடப்பாடி பழனிசாமி அதிமுக தலைவர் கிடையாது.. அதிமுகவில் நடக்கும் சதிக்கும் துரோகத்திற்கும் பழனிசாமியே காரணம் : கோவை செல்வராஜ்
மக்களைத் தேடிப் பயணிப்போம், மக்களின் குறைகளைத் தீர்ப்போம் ... திமுக தொண்டர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் பாஜ போராட்டம்: சென்னையில் அண்ணாமலை பங்கேற்பு
சொல்லிட்டாங்க...
தமிழகத்தை இரண்டாக பிரிக்க வேண்டும்: பாஜ எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் சர்ச்சை பேச்சு
ஹாட் டாக் பன் சாப்பிடும் போட்டி : 10 நிமிடங்களில் 63 பன்கள் சாப்பிட்டு ஜோய் செஸ்ட்நட் என்பவர் சாம்பியன்..!
தொடர் கனமழை : சிட்னி நகரத்தை சூழ்ந்த வெள்ளம்.. 50 ஆயிரம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற அறிவுறுத்தல்..
மெக்சிகோவில் விநோதம்.! பெண் முதலையை முத்தம் கொடுத்து மணந்த மேயர்!!
தோண்ட தோண்ட சடலங்கள்.. மணிப்பூரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்வு!!
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!