தமிழகத்தில் ஜனவரி 31ம் தேதி வரை பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும்; தமிழக அரசு அறிவிப்பு
2022-01-06@ 21:46:22

சென்னை: தமிழகத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதற்கான தேதி ஜனவரி 31 வரை நீட்டித்து தமிழக அரசு தெரிவித்துள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் பச்சரிசி, வெல்லம், நெய் உள்ளிட்ட 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்புவழங்குகிறது. இந்த பொங்கல் தொகுப்பினை சமீபத்தில் முதல்வர் மு.க ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதற்கிடையில், கொரோனா மற்றும் ஒமைக்ரான் பரவல் காரணமாக தமிழகத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று முழு ஊரடங்கு என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழகத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதற்கான தேதியை ஜனவரி 31-ம் தேதி வரை தமிழக அரசு நீட்டித்துள்ளது. ஜனவரி 9-ஆம் தேதி அன்று முழு ஊரடங்கு என்பதால் மக்கள் தங்களுக்கு தெரிவிக்கப்படும் தேதியில் பொங்கல் பரிசுப் பொருள்களைப் பெற்றுக் கொள்ளலாம். குறிப்பிட்ட நாளில் பெற முடியாவிட்டாலும் பொங்கலுக்கு முன்பாக ரேஷன் கடைகளுக்கு சென்று பெற்றுக் கொள்ளலாம். தவிர்க்க முடியாத காரணத்தால் பொங்கல் தொகுப்பை பெற இயலாதவர்கள் ஜனவரி 31-ம் தேதி வரை பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
மக்களுக்கு ஊட்டச்சத்து மிகுந்த உணவு வழங்குவதில் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக திகழ்கிறது: அமைச்சர் சக்கரபாணி பேச்சு
நிலுவை வழக்குகளை முடிக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்: உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி சதாசிவம் வலியுறுத்தல்
வருகிற 11ம் தேதி நடைபெறும் பொதுக்குழுவில் பொதுச்செயலாளரை தொண்டர்கள் மூலம் தேர்வு செய்ய தீர்மானம்: இபிஎஸ் முயற்சியை முறியடிக்க ஓபிஎஸ் திட்டம்
பாதுகாப்பு பண வைப்புத்தொகை செலுத்துவதில் சிறு மற்றும் குறு நிறுவனங்களுக்கு விலக்கு: தமிழக அரசு அறிவிப்பு
தமிழக கோயில்களில் அன்னை தமிழில் வழிபட 1,500 பேர் பதிவு: அறநிலையத்துறை தகவல்
சுற்றுலா வேன்களில் இருக்கை அதிகரிப்பு குறித்த அறிக்கை
தொடர் கனமழை : சிட்னி நகரத்தை சூழ்ந்த வெள்ளம்.. 50 ஆயிரம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற அறிவுறுத்தல்..
மெக்சிகோவில் விநோதம்.! பெண் முதலையை முத்தம் கொடுத்து மணந்த மேயர்!!
தோண்ட தோண்ட சடலங்கள்.. மணிப்பூரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்வு!!
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!
கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!