குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பு பை: க.சுந்தர் எம்எல்ஏ வழங்கினார்
2022-01-05@ 00:37:19

உத்திரமேரூர்: உத்திரமேரூர் அருகே குடும்ப அட்டைதாரர்களுக்கு, க.சுந்தர் எம்எல்ஏ பொங்கல் தொகுப்பு பை வழங்கினார். உத்திரமேரூர் அடுத்த திருப்புலிவனம் கிராமத்தில் பொங்கல் தொகுப்பு பை வழங்கும் விழா நேற்று நடந்தது. ஒன்றியக்குழு பெருந்தலைவர் ஹேமலதா ஞானசேகரன் தலைமை தாங்கினார். வட்டாட்சியர் காமாட்சி, ஒன்றியக் குழு உறுப்பினர் வீரம்மாள் மாயகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி மன்ற தலைவர் பிரதாப் வரவேற்றார். காஞ்சி திமுக தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ கலந்து கொண்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு 20 பொருட்கள் அடங்கிய பொங்கல் தொகுப்பினை வழங்கினார்.
இதில், மாவட்ட இலக்கிய அணி துணை அமைப்பாளர் காளிதாஸ், விவசாய அணி அமைப்பாளர் சோழனூர் ஏழுமலை, பொறியாளர் அணி துணை அமைப்பாளர் சசிகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோல் சோமநாதபுரம், மானாம்பதி, குண்ணவாக்கம், சாலவாக்கம் ஆகிய பகுதிகளிலும் பொங்கல் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
மேலும் செய்திகள்
ஓபிஎஸ்ஸின் மறைமுக பாஜக சாயம் வெளுத்துவிட்டது; கார்த்தி சிதம்பரம்.
அக்னிபாதை திட்டத்திற்கு எதிராக வலுக்கும் போராட்டம்!: தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்..!!
ஆவடி அமமுக செயல்வீரர்கள் கூட்டம்; ஓபிஎஸ்சை ரகசியமாக சந்திக்க அவசியம் இல்லை.! டிடிவி.தினகரன் பேட்டி
பொதுத்துறை நிறுவனங்களை விற்பது பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தும்; முத்தரசன் எச்சரிக்கை
மணப்பாறை நீதிமன்றத்தில் தொந்தரவு கொடுத்து வந்த குரங்குகள் கூண்டில் சிக்கின-பணியாளர்கள், பொதுமக்கள் நிம்மதி
துறையூர் அடுத்த பச்சைமலையில் மரவள்ளிக்கிழங்கு, முந்திரி சாகுபடி குறைவால் வாழ்வாதாரம் பாதிப்பு-மழைவாழ் மக்கள் வேதனை
மெக்சிகோவில் நூற்றுக்கணக்கான ஒரே பாலின ஜோடிகளுக்கு ஒன்றாக திருமணம்..!!
இஸ்ரேலில் உள்ள பாலைவனத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் பழங்கால மசூதி கண்டுபிடிப்பு..!!
ஈக்வேடாரில் தொடர்ந்து உயரும் எரிபொருட்களின் விலையால் பொதுமக்கள் சாலையில் போராட்டம்..!!
புதுச்சேரியில் இன்று பள்ளிகள் திறப்பு: மாணவர்களை உற்சாகமாக வரவேற்ற ஆசிரியர்கள்..!!
50 ஆண்டுகளில் முதன்முறையாக தொடங்கிய சில நிமிடங்களிலேயே முடிந்தது அதிமுக பொதுக்குழு கூட்டம்..!!