கொரோனா அதிகரிப்பு எதிரொலி; பஞ்சாப் மாநிலத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்.! பள்ளி, கல்லூரிகள் தற்காலிகமாக மூடல்
2022-01-04@ 12:14:49

பஞ்சாப்: கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த பஞ்சாப் மாநிலத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என பஞ்சாப் அரசு அறிவித்துள்ளது. பஞ்சாப்பில் தற்போது 1,741 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 5,87,530 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். 16,651 பேர் இதுவரை கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் ஒமிக்ரான் பரவல் எதிரொலியால் மாநிலத்தில் பள்ளி, கல்லூரிகள் தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஆன்லைன் கல்வி முறை தொடரலாம் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மருத்துவம் மற்றும் நர்சிங் கல்லூரிகளுக்கு விதிவிலக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இரண்டு தடுப்பூசி டோஸ் செலுத்தியவர்கள் மட்டுமே அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் தொழிற்சாலைகள் மற்றும் இதர இடங்களில் பணிபுரிய முடியும்.
திரையரங்குகள், மால்கள், உணவகங்கள், பார் ஸ்பா ஆகிய இடங்களில் 50 சதவீத வாடிக்கையாளருடன் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. விளையாட்டு அரங்கங்கள், உடற்பயிற்சி நிலையங்கள், நீச்சல் குளங்கள் தற்காலிகமாக மூடப்படுகிறது. பஞ்சாப் மாநிலத்தில் மாநகராட்சி பகுதியில் இரவு நேர ஊரடங்கு அறிவிப்பு இரவு 10 மணி முதல் 5 மணி வரை ஊரடங்கும் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை தேர்தல் நிதி பத்திரங்கள் இன்று முதல் விற்பனை; ஒன்றிய நிதியமைச்சகம் அறிவிப்பு
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் ஜூலை 18ம் தேதி துவக்கம்; ஆகஸ்ட் 12 வரை நடக்கும்
கேரளாவில் மீண்டும் ஆந்த்ராக்ஸ்; கொத்து கொத்தாக காட்டுப் பன்றிகள் பலி
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் முர்மு, சின்கா மனுக்கள் ஏற்பு
சுகேஷ் சிறை மாற்ற வழக்கு; உடனடியாக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு
மணிப்பூர் நிலச்சரிவில் 8 பேர் புதைந்து பலி; ராணுவ வீரர்கள் உட்பட 70 பேர் மாயம்
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!
கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!
நுபுர் சர்மாவை ஆதரித்த டெய்லர் தலை துண்டித்து கொடூர கொலை ராஜஸ்தானில் வன்முறை, போராட்டம்!!
ஆச்சர்யமூட்டும் கலைநயம்!: அமெரிக்கா சியாட்டெலில் அமைந்துள்ள கண்ணாடி பூங்காவின் வியக்க வைக்கும் புகைப்படங்கள்..!!
அமெரிக்காவில் ரயில் தடம் புரண்டு 3 பேர் பரிதாப சாவு; 50 பேர் காயம்