மேகதாது அணை வழக்கு 25ம் தேதி விசாரணை: சுப்ரீம் கோர்ட் அறிவிப்பு
2022-01-03@ 21:44:45

புதுடெல்லி: மேகதாதுவில் அணை கட்டப்படுகிறதா? என்பதை ஆய்வு செய்ய தென்மண்டல பசுமை தீர்ப்பாயத்தால் அமைக்கப்பட்ட குழுவை கலைத்த தேசிய பசுமை தீர்ப்பாய உத்தரவை எதிர்த்து தமிழக அரசு தொடர்ந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை வரும் 25ம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது. தேசிய தென்மண்டல பசுமை தீர்ப்பாயம், கர்நாடக மாநிலத்தில் மேகதாது அணை கட்டுவது தொடர்பாக கட்டுமானம், சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய தாமாக முன்வந்து பதிவு செய்தது. இவ்வழக்கை தேசிய பசுமை தீர்ப்பாயம் முடித்து வைத்தது.
அதற்கு எதிராக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் கடந்த ஆக. 11ம் தேதி மேல்முறையீடு மனு தாக்கல் செய்தது. இந்த மேல்முறையீடு மனுவை உச்சநீதிமன்ற நீதிபதி ஏ.எம்.கன்வில்கர் அமர்வு முன் விசாரிக்கப்பட்டு வருகிறது. தமிழக அரசின் சார்பில், ‘சட்ட விதிகளுக்கு உட்பட்டு தென்மண்டல பசுமை தீர்ப்பாயம், மேகதாது அணை தொடர்பாக கட்டுமானம், சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்து தாமாக முன்வந்து வழக்கு பதிந்து குழு அமைத்தது. இவ்விவகாரத்தில், தேசிய பசுமை தீர்ப்பாயம் தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் அமைத்த குழுவை கலைத்தது மட்டுமின்றி, தடையும் விதித்தது’ என்று தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று இவ்வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதி ஏ.எம்.கன்வில்கர் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசின் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி, ‘மேகதாது அணை தொடர்பாக இடையீட்டு மனுக்கள், பிரதான வழக்கின் மனுக்கள் நிலுவையில் உள்ளன’ என்று தெரிவிக்கப்பட்டது. இந்த வாதத்தின் போது நீதிபதி ஏ.எம்.கன்வில்கர் அமர்வு, தமிழக அரசு தொடர்ந்த மேல்முறையீட்டு மனு உள்ளிட்ட மனுக்கள் மீதான விசாரணை வரும் 25ம் தேதிக்கு நடைபெறும் என்று கூறி வழக்கை ஒத்திவைத்து உத்தரவிட்டது.
மேலும் செய்திகள்
தையல்காரர் கொலை வழக்கில் ஐதராபாத்தில் ஒருவன் கைது: என்ஐஏ அதிரடி நடவடிக்கை
இமாச்சலில் கொட்டி தீர்த்த கனமழை.. நிலச்சரிவில் சிக்கி 16 வயது சிறுமி பலி; 2 பேர் படுகாயம்
2 நாள் மழையால் வெள்ளத்தில் மிதக்கும் மும்பை..வெள்ளிக்கிழமை வரை கனமழை பெய்யும் என எச்சரிக்கை
கட்சி விவகாரங்களில் தலையிட முடியாது.. ஜூலை 11ல் அதிமுக பொதுக்குழுவை சட்டப்படி நடத்திக் கொள்ளலாம் : உச்சநீதிமன்றம்
மணிப்பூரில் இருந்து மியான்மர் சென்ற 2 தமிழர்கள் தீவிரவாதிகளால் சுட்டுக் கொலை : உடல்களை நாடு கொண்டு வர ஒன்றிய அரசு தீவிர முயற்சி!!
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 16,159 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி... 28 பேர் பலி!!
ஹாட் டாக் பன் சாப்பிடும் போட்டி : 10 நிமிடங்களில் 63 பன்கள் சாப்பிட்டு ஜோய் செஸ்ட்நட் என்பவர் சாம்பியன்..!
தொடர் கனமழை : சிட்னி நகரத்தை சூழ்ந்த வெள்ளம்.. 50 ஆயிரம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற அறிவுறுத்தல்..
மெக்சிகோவில் விநோதம்.! பெண் முதலையை முத்தம் கொடுத்து மணந்த மேயர்!!
தோண்ட தோண்ட சடலங்கள்.. மணிப்பூரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்வு!!
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!